விடுதலைப் புலிகளின் அலுவலகம் மீது ஓசாமா தீவிரவாதிகள் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளின் அரசியல் அலுவலகத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் நேற்று தாக்கினர்.

ஒசாமா விங் என்ற இஸ்லாமிய தற்கொலைப் படையினர் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சமீபத்தில் தான் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த 2 பேர் தாக்கப்பட்டனர். இந் நிலையில்அவர்களது அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.

திரிகோணமலை மாவட்டம் முட்டூரில் புலிகளின் அரசியல் அலுவலகம் உள்ளது. இதனை ஒரு கும்பல் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து அலுவலகத்தை சூறையாடியது. அலுவலகத்தில் இருந்து நாற்காலிகள் உடைக்கப்பட்டன.

இந்தத் தாக்குதல் நடந்த போது அந்த அலுவலகத்தில் யாரும் இல்லை.

இது குறித்து நார்வே அமைதிக் குழுவினரிடம் புலிகள் புகார் தந்துள்ளனர். அந்தப் புகாரில், ஒசாமா விங் அமைப்புதான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. பூட்டப்பட்டிருந்த அந்த அலுவலகத்தை உடைத்து அதைநாசப்படுத்தியுள்ளனர் என்ற புலிகள் கூறியுள்ளனர்.

முஸலீம்- தமிழர் ஒற்றுமையை குலைக்க..

இந்தத் தாக்குதலுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை துறைமுகம் மற்றும் கப்பல்போக்குவரத்துத்துறை அமைச்சர் ரெளப் ஹக்கீம் கூறுகையில், தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலானநல்லுறவைக் கெடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நார்வே அமைதி கண்காணிப்புக் குழு அரசுக்குக்கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை புலிகள் அரசியல் பிரிவைச் சேர்ந்த இருவர் திரிகோணமலையில் தாக்கப்பட்டனர்.அவர்களைக் கடத்திச் செல்ல ஒரு கும்பல் முயன்றது. ஆனால், கிராம மக்கள் தலையிட்டு அக் கும்பலைவிரட்டியடித்தனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் விவாதிக்க யாழ்பாணத்தில் நார்வே கண்காணிப்புக் குழு ஒரு கூட்டத்தைக்கூட்டியது. அதில் புலிகள், ராணுவம், கடற்படை, போலீஸ் ஆகியோரின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடற்படையினர் தான் இது போன்ற தாக்குதலை நடத்தி அமைதிப் பேச்சுவார்த்தையையும் போர் நிறுத்தத்தையும்குலைக்க முயல்வதாக புலிகள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து புலிகளும், கடற்படையும் இந்தத் தாக்குதல் குறித்து தனித்தனி விசாரணை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்தச் சம்பவம் குறித்து சுதந்திரமான தனி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு நார்வே கண்காணிப்புக் குழு கடிதம் எழுதியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+