பா.ஜ.க. யோசனை: வி.எச்.பி. நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹரித்வார்:

அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்குமாறு பாரதீய ஜனதா கூறிய யோசனையை விஸ்வ ஹிந்துபரிஷ்த நிராகரித்துவிட்டது.

இந்த அமைப்பின் கூட்டம் நேற்று ஹரித்வாரில் தொடங்கியது. அதில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டேம். நாங்கள் நிச்சயம் கோவில் கட்டுவோம் என அந்த அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான வி.கே. மல்ஹோத்ரா இனறு நிருபர்களிடம் பேசுகையில்,அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவதாக வி.எச்.பி. எழுத்துப்பூர்வமாகஉறுதியளித்தது. எனவே, நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வி.எச்.பி. முன் வர வேண்டும் என்றார்.

ஆனால், பா.ஜ.கவின் இந்த யோசனையை ஏற்க முடியாது என வி.எச்.பி. அறிவித்துள்ளது. இதன் சர்வதேச பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா இன்று நிருபர்களிடம் கூறுகையில்,

நாங்கள் கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பில் கோவில் கட்டும் கோரிக்கையை முன் வைக்கிறோம்.

கோவில் கட்டுவதை எதிர்த்து முஸ்லீம் சட்ட வாரியம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் நாங்கள் எங்கள்பலத்தை வைத்து கோவிலைக் கட்ட முடிவு செய்துள்ளோம்.

அயோத்தியில் கோவில் கட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தீர்மானம்நிறைவேற்றியிருக்கிறோம். அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம்.

அரசியல் கட்சிகளின் யோசனையை ஏற்க முடியாது. முஸ்லீம்களுடன் இந்த விஷயத்தில் பேச்சு வார்த்தைநடத்தவும் நாங்கள் தயாராக இல்லை.

காஷ்மீரை பிரிக்க கோரிக்கை:

காஷ்மீர் மாநிலத்தை 4 பகுதிகளாக பிரிக்க வேண்டும். இந்துக்கள் நிறைந்த லடாக் பகுதியை யூனியன்பிரதேசமாக்க வேண்டும்.

அம் மாநில முதல்வர் பரூக் அப்துல்லா இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்றார்.

மதத் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு:

வி.எச்.பியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள இன்னொரு இந்து மதத் தலைவான மகன்ந்த் தரம்தாஸ்,அயோத்தியில் மீண்டும் மசூதி கட்ட அனுமதிக்க வேண்டும். இதற்காக போராட நான் தயார் என்றார்.

இது குறித்து பதிலளித்த வி.எச்.பியின் தலைவரான கிரிராஜ் கிஷோர், உலகின் எந்த சக்தியாலும் அயோத்தியில்மீண்டும் பாபர் மசூதியைக் கட்ட முடியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+