பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது.

பிளஸ் டூ முடிவுகள் வெளிவந்து நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு கட்-ஆப் மார்க்குகளும்அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்த கட்-ஆப் மதிப்பெண்ணின் அடிப்படையில் மாணவர்கள் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தரேங்க் அடிப்படையில் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன.

இன்று பி.ஆர்க் (Bachelor of Architecture) பிரிவில் சேருவதற்கான கவுன்சிலிங் நடந்தது. சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் நடந்த இந்த கவுன்சிலிங்கில் சுமார் 900 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ளகல்லூரிகளில் 320 பி.ஆர்க் இடங்கள் தான் உள்ளன.

கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கம்யூட்டர்கள் தரப்பட்டன. அவர்கள் அதில் அமர்ந்து சேரவிரும்பும் கல்லூரி, பாடத் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் அவர்களது ரேங்கைப் பொறுத்து அரசின் இலவச சீட் ஒதுக்கப்பட்டுள்ளதா, பேமண்ட் சீட்ஒதுக்கப்பட்டுள்ளதா, மேனேஜ்மென்ட் கோட்டாவில் சீட் தரப்பட்டுள்ளதா என்று அறிவிக்கப்பட்டது.

இதில் தங்களுக்கு வசதியான சீட்டை தேர்வு செய்த மாணவர்களுக்கு உடனடியாக கல்லூரியில் சேருவதற்கானவிண்ணப்பங்கள் தரப்பட்டன.

இன்றே 320 சீட்களுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

நாளையும் நாளை மறுநாளும் வொகேசனல் எனப்படும் சிறப்பு தொழிற் பயிற்சிக் கல்லூரிகளில் சேரும்மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிது.

27ம் தேதி தான் முக்கியமான பி.ஈ. அகாடெமிக் தொழிற் கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சிலிங்தொடங்குகிறது. இந்த கவுன்சிலிங் சென்னை தவிர மதுரை, திருச்சி, கோவையிலும் நடக்கிறது.

இந்த ஆண்டு சுமார் 65,000 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+