அயோத்தி: காஞ்சி சங்கராச்சாரியார் டெல்லி சென்றார்
சென்னை:
அயோத்தி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் இன்று காலை டெல்லி சென்றார்.
நேபாள மன்னரின் அழைப்பை ஏற்று நேபாளத் தூதரகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
பின்னர் டெல்லியில் பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் அயோத்தி விவகாரம் குறித்துப் பேசுகிறார்.கடந்த மார்ச் மாதம் இந்தப் பேச்சுவார்த்தைகளை அவர் துவக்கினார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள சர்ச்சைக்குள்ளாகாத நிலத்தில் கோவில்கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சட்ட வாரியத்திடம் அவர் பேசி அதை ஒப்புக் கொள்ளவைத்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் பிரச்சனைக்குரிய இடம் குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.
இந்த பார்முலாவின் அடிப்படையில் தான் மீண்டும் இப்போது பேச்சு நடத்த உள்ளார் சங்கராச்சாரியார்.
ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக இருந்தால் அதை ஏற்க மாட்டோம் என விஸ்வ ஹிந்து பரிஷத்நேற்று அறிவித்தது. நீதிமன்றம் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது என அறிவித்துள்ளது.
இந் நிலையில் மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கவுள்ளார் சங்கராச்சாரியார்.
சங்கராச்சாரியாருக்கு வீரமணி எதிர்ப்பு:
தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் அயோத்தி விவகாரத்தில் சங்கராச்சாரியார் தலையிட்டுவருகிறார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இவர் ஆர்.எஸ்.எஸ்சின் தீவிரமான ஆதரவாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர் எப்படி இந்தவிவகாரத்துக்கு தீர்வு காண முடியும். ஆனால், தனக்கு சுய விளம்பரம் கிடைக்கும் என்பதால் அவர் இதில் அமைதித்தூதராக நடந்து கொள்வதாகக் காடடிக் கொள்கிறார்.
இவர் சொல்லும் தீர்வை விஸ்வ ஹிந்து பரிஷத் கேட்கப் போகிறதா?
இவர் எடுக்கும் முடிவுக்கு நாட்டின் பிற சங்கராச்சாரியார்கள் ஒப்புதல் அளித்துள்ளார்களா? என்று கேள்விஎழுப்பியுள்ளார்.அயோத்தி விவகாரத்தில் வி.எச்.பி. அந்தர் பல்டி
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications