For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி விவகாரத்தில் வி.எச்.பி. அந்தர் பல்டி

By Staff
Google Oneindia Tamil News

ஹரித்வார் (உ.பி.):

அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பணிவதாக முதலில் கூறிய விஸ்வ ஹிந்து பரிஷத் அந்தர் பல்டிஅடித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அடிபணிய மாட்டோம் என்று இன்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கூட்டம் இன்று ஹரித்வாரில் தொடங்கியது. இக் கூட்டத்தில் மீண்டும் அயோத்திவிவகாரத்தை வி.எச்.பி. கையில் எடுத்துள்ளது.

அயோத்தி விவகாரத்தில் விட்டுத் தரவே முடியாது, இந்தப் பிரச்சனையை நீதிமன்றம் மூலம் தீர்க்க முடியாது என்றுஇக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று தான் இந்த பிரச்சனையில் தீர்வு ஏற்பட வேண்டுமானால் வி.எச்.பி. மற்றும் அரசியல் அமைப்புகள் ஒதுங்கிஇருக்க வேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார்.

இந் நிலையில் வி.எச்.பி. தனது பழைய பல்லவியை பாட ஆரம்பித்துள்ளது. நிருபர்களிடம் பேசிய இந்தஅமைப்பின் அகில உலக பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா,

கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சிலை தான நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குகண்டனம் தெரிவிக்கிறோம்.

அயோத்தியில் கோவில் கட்டுவது தொடர்பாக 3 கட்ட போராட்டத் திட்டம் அமலாக்கப்படும். மத்திய அரசும்,இஸ்லாமிய சட்ட வாரியமும் இந்த விஷயத்தில் மாற்றி மாற்றி பேசுகின்றன.

ராமர் கோவில் விவகாரம் என்பது 90 கோடி இந்துக்களின் மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இதில்நீதிமன்றம் தீர்வு காண முடியாது. மத விவகாரங்களில் நீதிமன்றத்துக்கு இடமில்லை என்றார்.

பிரதமரிடம் எழுதித் தந்த வி.எச்.பி.:

கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சர்சைக்குரிய இடத்தில் சிலை தான நிகழ்ச்சியை நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத்திட்டமிட்டபோது நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து காஞ்சி சங்கராச்சியார் மூலமாக அப்போது அமைதியை ஏற்படுத்தியது மத்திய அரசு. அவர் இந்து,முஸ்லீம் அமைப்புகளுடன் பேசி ஒரு திட்டத்தைக் கூறினார்.

அதன்படி பிரச்சனைக்குரிய இடத்துக்கு அருகே கோவில் கட்டிக் கொள்ள இஸ்லாமிய சட்ட வாரியத்தை ஒப்புக்கொள்ள வைத்தார்.

அதே போல பிரச்சனைக்குரிய இடத்தில் சிலை தான நிகழ்ச்சி நடத்துவதையும் ஒத்தி வைக்கச் செய்தார். இதைத்தொடர்ந்து தூண் தான நிகழ்ச்சியை மட்டும் ராம ஜென்ம பூமி அறக்கட்டளை நடத்தியது.

இந்த தூண் தான நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டுமானால், இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வுகாண ஒத்துழைப்பதாக எழுதித் தர வேண்டும் என பிரதமர் வாஜ்பாய் நிர்பந்தித்தார். இதையடுத்து வி.எச்.பி.மற்றும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை ஆகியவை நீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்படுவதாக பிரதமர் வாஜ்பாயிடம்ஒரு கடிதம் தந்தனர்.

அந்தக் கடிதத்தை தரச் செய்தவர் காஞ்சி சுவாமிகள்.

இதைத் தொடர்ந்து தூண் தான நிகழ்ச்சியை நடத்துவதில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவருக்கும்விஸ்வ ஹிந்து பரிஷதுக்கும் மோதல் ஏற்பட்டது.

தன்னிடம் ஆலோசிக்காமல் எல்லா முடிவுகளையும் வி.எச்.பி. எடுப்பதாகக் கூறிய ராமஜென்ம பூமிஅறக்கட்டளைத் தலைவர் பரமஹம்ஸ் தூண் தான நிகழ்ச்சியை தனது மடத்திலேயே நடத்திவிட்டு வி.எச்.பிக்குஅதிர்ச்சி தந்தார்.

அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் இந்த விவகாரத்தில் ராமஜென்ம பூமி அறக்கட்டளை மற்றும் இஸ்லாமி சட்டவாரியம், பாபர் மசூதி கமிட்டி ஆகியோருடன் மட்டுமே பேசினார். இப்போதும் அவர் அந்த முடிவில் தான்உள்ளார்.

வி.எச்.பி., பா.ஜ.க., அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர் ஆகியோர் இந்த விஷயத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதுதான் பிரச்சனையைத் தீர்க்க உதவும் என்று காஞ்சி சுவாமிகள் கூறியுள்ளார்.

கலக்கத்தில் வி.எச்.பி.:

இதனால் கலக்கமடைந்துள்ள வி.எச்.பி. இப்போது மீண்டும் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் கூறுகையில்,

குஜராத்தில் நடந்த வன்முறை கடந்த 1000 ஆண்டுகளாக நடந்த இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு எதிரானமுதல் போர். குஜராத்தில் முஸ்லீம்கள் முகாம்களில் வசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாமுழுவதும் முஸ்லீம்கள இது போல முகாம்களில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றார்.

கூட்டத்தை புறக்கணித்த இந்துப் பள்ளிகள்:

ஆனால், மத நம்பிக்கையை அரசியல் லாபத்துக்காக விஸ்வ ஹிந்து பரிஷத் பயன்படுத்துவதாகக் கூறி இந்தக்கூட்டத்தை இந்த நகரைச் சேர்ந்த இந்து மதப் பள்ளிகள் (அக்ரஹாரா) புறக்கணித்தன.

இந்துக்களின் புனித நகரான ஹரித்வாரில் உள்ள நூற்றுக்கணக்கான இந்துப் பள்ளிகளின் மாணவர்கள்,ஆசியர்கள், இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த மத வழிபாட்டு மைய பிரநிதிகளுக்கு இக் கூட்டத்தில் கலந்து கொள்ளஅழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மதத்தை இந்த அமைப்பு அரசியலாக்குவதாகக் கூறி அவர்கள்புறக்கணித்துவிட்டனர்.

இதனால் வெறும் 200 பேருடன் இக் கூட்டம் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X