கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள்
டெல்லி: இந்திய மாணவர்களுக்கு இந்த மே மாதம் மிக மோசமானதாக மாறியுள்ளது. இந்த ஒரே மாதத்தில் பல்வேறு தேர்வுகளின் குளறுபடிகள் காரணமாகச் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட். சிபிஎஸ்சி, யுபிஎஸ்சி எனப் பல்வேறு வழிகளிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பொதுவாக மே மாதம் என்றாலே மாணவர்களுக்குக் குஷி ஆகிவிடும். எக்ஸாம் எல்லாம் முடிந்துவிடும். எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் கோடைக் காலத்தைக் கழிப்பார்கள். ஆனால், இந்தியக் கல்வி வரலாற்றில் இந்தாண்டு மே மாதம் ஒருபோதும் மறக்க முடியாத கசப்பான பக்கமாக மாறிவிட்டது. கோடை விடுமுறை முடிந்து புதிய கனவுகளுடன் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய லட்சக்கணக்கான மாணவர்கள், இன்று தங்களின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நேரடிப் பாதிப்பு
இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 23.8 லட்சம் மாணவர்கள் பல்வேறு தேர்வு குளறுபடிகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சார்ந்த குடும்பங்களையும் சேர்த்தால் பல கோடி பேர் இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு ரத்து, சிபிஎஸ்இ மதிப்பெண் குளறுபடிகள் மற்றும் யுபிஎஸ்சி தேர்வு விவகாரம் என அடுத்தடுத்த அதிர்ச்சிகள் மாணவர்களை நிலைகுலையச் செய்துள்ளன.
நீட்
இதில் முதலில் வெடித்தது நீட் விவகாரம் தான்.. மே 3ம் தேதி நாடு முழுவதும் 22.8 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். ஆனால், மே 11ம் தேதி தேர்வுத்தாள் கசிவு புகார்கள் காரணமாக இந்தத் தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இது ஒட்டுமொத்தத் தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆண்டுக்கணக்கில் பயிற்சி எடுத்துத் தேர்வு எழுதிய மாணவர்கள், தற்போது மீண்டும் ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள மறுதேர்வுக்குத் தயாராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நீட் தேர்வு விவகாரத்தை இப்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூளையாகச் செயல்பட்டவரை சிபிஐ நெருங்கிவிட்டது. ஆனால், தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்துப் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.
சிபிஎஸ்இ
அடுத்து சிபிஎஸ்இ மற்றும் சிஇயுஇடி தேர்வுகளில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்.. மே 25 முதல் 28ம் தேதி வரை வெளியான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் பெரும் குளறுபடிகள் கண்டறியப்பட்டன. பல மாணவர்களுக்கு மதிப்பீடு செய்வதில் தவறுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மே 29ம் தேதி மறுமதிப்பீட்டுத் தளம் ஓபன் செய்யப்பட்டது.
மறுபுறம், மே 30ம் தேதி நடந்த சிஇயுஇடி (CUET-UG) நுழைவுத்தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 3,765 மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உயர்கல்வி சேர்க்கைக்கான இந்தத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி, மாணவர்களின் கல்லூரி கனவுகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இப்படி அடுத்தடுத்து நடந்த குளறுபடிகள் மாணவர்களைக் கடுமையாகப் பாதித்தது.
யுபிஎஸ்சி
தொடர்ந்து மே 24-ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வும் மாணவர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. வினாத்தாளின் கடினத்தன்மை மற்றும் கேட்கப்பட்ட வினாக்களின் தரம் குறித்து நாடு முழுவதும் தேர்வர்கள் தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இப்படி ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்து வந்த பாதை
- முதலில் மே 3ல் நடந்த நீட்-யுஜி தேர்வில் 22.8 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
- இதையடுத்து மே 11ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
- மே 25-28ம் தேதி சிபிஎஸ்இ முடிவுகளில் மதிப்பெண் கணக்கிடுவதில் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
- மே 30ம் தேதி சிஇயுஇடி விவகாரத்தில் குளறுபடி கண்டறியப்பட்ட நிலையில், 3,765 மாணவர்கள் பாதிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக அரங்கேறிய இந்த நிகழ்வுகள் இந்தியாவின் தேர்வு முறையையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளன. முறைகேடுகள் கண்டறியப்பட்ட மறுதேர்வுகள் நடத்தப்பட்டாலும் கூட இது தேர்வு முறை மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறது. மேலும், மாணவர்களின் கடும் உழைப்பும், காலமும் விரயமாவதைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பிளஸ்-2 துணைத்தேர்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்; ஜூன் 4 வரை பதிவு செய்யலாம் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications