கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதார மையமாகவும், அந்நாட்டின் மிகப் பெரிய நகரமாகவும் விளங்கும் கராச்சி தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழலில், அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகிய மூன்றும் கிடைக்காமல் கோடிக்கணக்கான மக்கள் திண்டாடி வருகின்றனர்.
பாகிஸ்தானின் தலைநகராக என்ன தான் இஸ்லாமாபாத் இருந்தாலும் அந்நாட்டின் முக்கிய பொருளாதார மையம் என்றால் அது கராச்சி தான். பாகிஸ்தானின் முக்கிய பொருளாதார மையமாக இருக்கும் கராச்சியில் கடந்த சில காலமாகவே நிலைமை மோசமாக இருக்கிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலால் அங்குக் குடிநீர், மின்சாரம் மற்றும் சிலிண்டர் கூட முறையாகக் கிடைக்காமல் மக்கள் திணறி வருகிறார்கள்.

முடக்கம்
நகரெங்கும் நிலவும் இந்தத் தட்டுப்பாடு சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப் போட்டுள்ளது. பாகிஸ்தானின் நிதித் தலைநகராகக் கருதப்படும் கராச்சியில், அத்தியாவசியச் சேவைகள் சீர்குலைந்துள்ளதால் மக்கள் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நகருக்கு வழங்கப்பட வேண்டிய குடிநீரில் தினமும் சுமார் 5.4 கோடி கேலன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கராச்சியின் நீர் மற்றும் கழிவுநீர்க் கழகம் தெரிவித்துள்ளது.. இதற்கு மிக முக்கியமான காரணம், கராச்சியின் வடகிழக்கு நீரேற்று நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் முக்கிய கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஆகும். இதனால் விநியோகக் கட்டமைப்பு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது
மே 31 அதிகாலை 3:27 மணியளவில் வடகிழக்கு கராச்சி நீரேற்று நிலையத்திற்குச் செல்லும் மின்சாரம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது. இது கே-II நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை முடக்கி, நகரின் பல பகுதிகளுக்குச் செல்லும் குடிநீர் விநியோகத்தை முழுமையாகப் பாதித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கே-II நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் பிரதான கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அவை முழுமையான தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
மாற்றுத் திட்டம் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டாலும், அதன் திறன் மிகவும் குறைவாக இருப்பதால் நீரேற்றும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக கராச்சி நகரின் குடிநீர் விநியோகக் கால அட்டவணை முற்றிலும் மாறியுள்ளது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு உடனடியாகச் சரி செய்யப்படாவிட்டால், வரும் நாட்களில் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் என்று KWSC நிர்வாகம் மக்களுக்கும் அரசுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தண்ணீர் லாரி
கராச்சி நகரம் தொடர்ந்து இரண்டாவது மாதமாகத் தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காகத் தனியார் தண்ணீர் லாரிகளை முழுமையாகச் சார்ந்து இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் லாரிகளின் விலையும் விண்ணைத் தொடுவதால், சாமானிய மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பொருளாதாரச் சூழல் ஏற்கனவே மோசமாக உள்ள நிலையில், இதுபோன்ற அடிப்படை பணிகள் முடங்குவது அரசுக்குச் சவாலாக உள்ளது. பழைய உள்கட்டமைப்புகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததே இதுபோன்ற சிக்கல்களுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கராச்சியின் இந்த நெருக்கடி பாகிஸ்தானின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டையே பிரதிபலிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கேஸ் சிலிண்டர்
மின்சாரக் கோளாறு ஒருபுறம் இருக்க, மறுபுறம் எரிவாயுத் தட்டுப்பாடும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வீடுகளில் அடுப்பு எரிக்கக் கூட எரிவாயு கிடைக்காததால், பல குடும்பங்கள் சமைக்க முடியாமல் தவித்து வருகின்றன. 50 டிகிரி செல்சியஸை நெருங்கும் வெயிலில் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நெருக்கடி குறித்துப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சீரான விநியோகம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக மக்கள் கொதித்து எழுகிறார்கள். இதனால் மக்கள் அடிக்கடி போராட்டத்தில் இறங்கும் சூழலில், நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் உள்நாட்டு நிர்வாகக் குழப்பங்களுக்கு மத்தியில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதும் கவனம் ஈர்க்கிறது. இந்த விவகாரம் பாகிஸ்தானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும், நீர் மேலாண்மையிலும் ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழலில்தான் கராச்சியின் உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்து வருவது கவலையை அளிக்கிறது.
நிலைமை மோசம்
நிலைமை இப்படியே நீடித்தால், வரும் நாட்களில் கராச்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு இன்னும் மோசமாகும் என அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் நிலவும் குளறுபடிகள் சரி செய்யப்படாவிட்டால், பாகிஸ்தானின் மிகப் பெரிய வணிக நகரம் ஒரு பெரும் மக்கள் கிளர்ச்சியைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வுகாண மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications