திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகிணி உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது, நடிகை திரிஷாவும் உடனிருந்தார். ஏற்கனவே முதல்வராக விஜய் பதவியேற்ற போதும் திரிஷா அங்கிருந்தார். இதனால் சுப மற்றும் துக்க நிகழ்வுகளின் போது மட்டும் விஜய்யுடன் நடிகை திரிஷா வருவதாக பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகிணி மணி வயது முதிர்வு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை 8.45 மணிக்கு மோகிணி மணி காலமானார். இது துபாயில் இருந்த அஜித்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பின் அஜித்குமார் துபாயில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை வந்து சேர்ந்தார்.

இதன்பின் திரையுலகினர் பலரும் அஜித்குமாரின் தாயாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் வந்து முதல்வர் ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார். இந்த துக்க நிகழ்வின் போது, முதல்வருடன் நடிகை த்ரிஷாவும் உடனிருந்து அஞ்சலி செலுத்தியது தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
திரையுலகில் பல வருடங்களாக டாப் நட்சத்திரங்களாக வலம் வரும் விஜய் - த்ரிஷா காம்போ, தற்போது அரசியல் மற்றும் தனிப்பட்ட முக்கிய நிகழ்வுகளிலும் ஒன்றாகத் தென்படுவது ரசிகர்களாலும் நெட்டிசன்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. விஜய் மற்றும் த்ரிஷா இருவருமே நடிகர் அஜித்துடன் நெருங்கிய நட்பு கொண்டவர்கள்.
அஜித்தின் தாயார் மறைவு செய்தி கேட்டு துபாயில் இருந்து அவர் சென்னை திரும்பிய உடன், முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்தத் துயரமான தருணத்தில் முதல்வர் விஜய்யுடன் நடிகை த்ரிஷாவும் வந்து, அஜித்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதற்கு முன் மே 10ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற போதும் விவிஐபி வரிசையில் நடிகை த்ரிஷா முன்னிலை பெற்றிருந்தார்.
கில்லி முதல் லியோ வரை விஜய்யுடன் திரையில் ஜோடி சேர்ந்த த்ரிஷா, அஜித்துடனும் மங்காத்தா, கிரீடம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனால் இரு குடும்பங்களுடனும் த்ரிஷாவுக்கு இருக்கும் தனிப்பட்ட தோழமையின் காரணமாகவே அவர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கிறார் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
எனினும், தமிழக முதல்வருடன் தொடர்ச்சியாக அவர் பொதுவெளியில் பயணிப்பது, எதிர்காலத்தில் தவெக கட்சியில் த்ரிஷாவுக்கு ஏதேனும் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதா என்ற அரசியல் யூகங்களையும் பலப்படுத்தியுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பும் கூட திருமண நிகழ்ச்சியில் விஜய் - த்ரிஷா ஒரே மாதிரியான ஆடை அணிந்து பங்கேற்றனர். இதன் மூலமாக சுப மற்றும் துக்க நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்பது வாடிக்கையாகி வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications