மத்திய அமைச்சரவை மாற்றம்: இன்று பிரதமர் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைபிரதமர் வாஜ்பாய் இன்று கூட்டியுள்ளார்.

பிரதமரின் இல்லத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும்பங்கேற்கின்றனர்.

இன்று தான் உள்துறை அமைச்சர் அத்வானி ஒரு வார கால ஸ்பெயின் பயணத்துக்குப் பின் டெல்லி திரும்புகிறார்.அவரது வருகைக்காகத் தான் இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு இன்று கூடுகிறது.

வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி, திருநாவுக்கரசு ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும்என்று கருதப்படுகிறது.

சில முக்கிய அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றப்படவுள்ளன. யஷ்வந்த் சின்ஹாவை தூக்க வேண்டும் எனசங் பரிவார் அமைப்புகள் நெருக்கி வருகின்றன. ஆனால், அமைச்சர் பதவியில் இருந்து விலக சின்ஹா மறுத்துவருகிறார். அவரை எப்படியாவது ஜார்க்கண்ட் மாநில முதல்வாராக்கி விட பிரதமர் முயன்று வருகிறார்.

இந் நிலையில் மத்திய அரசை மிகக் கடுமையாக சாட ஆரம்பித்திருக்கிறது பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக்கட்சி. நேற்று அக் கட்சியின் தலைவர் பதவியை தனது மகன் ஒமர் அப்துல்லாவிடம் ஒப்படைத்தார் பரூக். ஒமர்இப்போது வெளியுறவுத்துறை இணையமைச்சராக உள்ளார்.

ஆனால், நேற்று கட்சித் தலைவர் பதவியை ஏற்ற ஒமர் மத்திய அரசை போட்டு வாங்கினார். தனது தந்தையைதுணை ஜனாதிபதியாக்கியிருக்க வேண்டிய மத்திய அரசு அதைப் பற்றி கவலையே படவில்லை என்று குற்றம்சாட்டினார். இப்போது இன்னொரு முஸ்லீமான கலாமை ஜனாதிபதியாக்கிவிட்டு எனது தந்தையைஓரம்கட்டிவிட்டார்கள் என்றார் ஒமர்.

இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டுக் கட்சி தொடர்ந்து இருப்பது சந்தேகம் தான். அக்கட்சியை சமாதானப்படுத்த பரூக் அப்துல்லாவுக்கு மத்திய அமைச்சர் பதவியைத் தர மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. அவருக்கு வெளியுறவுத்துறை தரப்படலாம்.

அப்படிப்பட்ட நிலையில் ஒமர் அப்துல்லா காஷ்மீர் முதல்வராகலாம். ஆனா, பரூக் அப்துல்லா மத்திய அமைச்சர்ஆக ஒப்புக் கொள்ளாவிட்டால், ஒமரை இணையமைச்சர் பதவியில் இருந்து கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்திஅவர்களை சமாதானப்படுத்த வாஜ்பாய் முயல்வார் என்று தெரிகிறது.

இன்று பரூக் மற்றும் ஒமர் இருவரும் டெல்லி வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில்பங்கேற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+