தமிழகத்தில் ஒரு அதிசய அரசியல்வாதி
சென்னை:
கருணாநிதியிடம் வீட்டு வசதித்துறை அமைச்சராக, எம்.ஜி.ஆர். ஆட்சியில் சபாநாயகராக, மீண்டும் ஜெயலலிதாஆட்சியில் அமைச்சராக மிகுந்த ச்ெலவாக்கோடு விளங்கிய க.ராசாராம் இன்றும் வாடகை வீட்டில் தான் வசித்துவருகிறார்.
அவர் இவ்வளவு நியாயமாக இருப்பதாலோ என்னவோ அவரை தமிழக மக்கள் அரசியலில் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டனர்.
அண்ணா காலத்தில் திராவிட இயக்கத்தில் நுழைந்தவர் ராசாராம். 5 ஆண்டுகள் சட்டசபை சபாநாயகராக இருந்தார்.5 ஆண்டுகள் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவீட்டுவசதித் துறை வீடுகளைக் கட்டினார்.
ஆனால், தனக்கென்று ஒரு வீட்டைக் கூட கட்டிக் கொள்ளவில்லை இந்த அதிசய அரசியல்வாதி.
இப்போதும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ராசாராம். 1971ம் ஆண்டு தான் குடியேறிய அதே வீட்டில் தான்வாடகைக்கு இன்றும் வசித்து வருகிறார். பதவியில் இருக்கும்போது வீட்டு வாடகையை அரசிடம் இருந்து வாங்கிக்கட்டியவர், பதவியில் இல்லாத காலத்தில் சொந்த காசில் வாடகை கட்டி வருகிறார்.
இவர் வாடகைக்கு இருப்பதை அறிந்த எம்.ஜி.ஆர். அவருக்கு ஒரு வீடு வாங்கித் தர முன் வந்தபோது அதைமறுத்திவிட்டாராம். நீங்கள் இருக்கும் வீட்டையே அதன் உரிமையாளரிடம் பேசி வாங்கித் தருகிறேன் என்றுஎம்.ஜி.ஆர். நிர்பந்தித்தும் அதைத் தவிர்த்திருக்கிறார் ராசாராம்.
இவர் மீது மிகுந்த மரியாதை கொண்ட அந்த வீட்டின் உரிமையாளரே இவருக்கு அந்த வீட்டை இலவசமாகத் தரபலமுறை முன் வந்திருக்கிறார். அதையும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ராசாராம்.
செல்வாக்கோடு இருந்தபோது பல தொழிலபதிர்களும் இவருக்கு அந்த வீட்டை வாங்கித் தருவதாகக் கூறியபோதுஅவர்களைத் திட்டி விரட்டியிருக்கிறார் இந்த மனிதர்.
எம்.ஜி.ஆர். ரூ 6 லட்சம் வரை தருவதாகவும் அந்த வீட்டை வாங்கிக் கொள்ளவும் வற்புறுத்திப் பார்த்தும் இவர்மசியவில்லையாம்.
மன்னார்குடி போன்ற ஊர்களையே வாங்கிவிட்ட கும்பலுக்கு மத்தியில், மதுரையின் பல பகுதிகளை சுற்றிவளைத்துவிட்ட அழகிய தளபதிக்கு மத்தியில் இப்படிப்பட்ட மனிதரும் திராவிடக் கட்சியில் இருந்திருக்கிறார்.
இப்போது அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டு அமைதியாக வாழ்ந்து வருகிறார் ராசாராம். இவரை ஒதுங்கவிட்டதுதமிழக மக்களின் தவறு என்று தான் சொல்ல வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications