தீவிரவாதிகள் விவகாரம்: முஷாரபுக்கு அமெரிக்கா சூடு
டெல்லி:
இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழையாமல் நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவேன் என்று நான் அமெரிக்காவுக்குஉறுதிமொழி ஏதும் தரவில்லை என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளதற்குஅமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளைத் தடுப்பதாக எங்களிடம் முஷாரப் உறுதிமொழி தந்தது உண்மை என அமெரிக்காதெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்தில் நியூஸ்வீக் இதழுக்கு முஷாரப் அளித்த பேட்டியில்,
இந்திய காஷ்மீரில் நடப்பது சுதந்திரப் போர். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்துபோராளிகள் தான் அங்கு சென்று சண்டை போட்டு வருகின்றனர். அவர்களை எல்லைத் தாண்டிச் செல்லாமல்தடுக்க அமெரிக்கா வலியுறித்தியது. இதனால் இப்போது அவர்களை தடுத்துள்ளோம். ஆனால், நிரந்தரமாகஅவர்களைத் தடுப்பேன் என்று அமெரிக்காவிடம் எந்த உத்தரவாதமும் தரவில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதிமொழி தந்ததால் தான்பாகிஸ்தானை தாக்காமல் விட்டோம் என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
இந் நிலையில் முஷாரபின் இந்த பேட்டி குறித்து இந்தியாவில் உள்ள தனது தூதரம் மூலமாக அமெரிக்கா விளக்கம்தந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளாவது:
எல்லையில் பெரும் பதற்றம் நிலவியபோது எங்கள் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்பாகிஸ்தான் சென்று பர்வேஸ் முஷாரபை சந்தித்தார். ஜூன் 6ம் தேதி நடந்த அந்தச் சந்திப்பின்போது எல்லைதாண்டி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதை நிரந்தரமாகத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அப்போதுமுஷாரப் உறுதிமொழி தந்தார் என்று அமெரிக்கா விளக்கம் தந்துள்ளது.
பாகிஸ்தான் பின் லேடன்:
இந் நிலையில் பின் லேடன் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள பழங்குடியின பகுதிகளில்தான் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அந்தக் கும்பலைப் பிடிப்பது தொடர்பாக முஷாரபுடன் ஆலோசனை நடத்த அமெரிக்க ராணுவத்தின் காமாண்டர்ஜெனரல் டாமி பிராங்ஸ் இஸ்லாமாபாத் வந்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications