விருதுநகர் அருகே லாரியை கடத்தி டிரைவரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை
மதுரை:
விருதுநகர் அருகே லாரியைக் கடத்திச் சென்று, டிரைவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தைக் கொள்ளையடித்துச்சென்றனர்.
தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி ஆந்திரா சென்று கொண்டிருந்தது. விருதுநகர் அருகேபாப்பாத்தி என்ற இடத்துக்கு நேற்றிரவு அந்த லாரி வந்தது.
அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு லாரி இந்த லாரியை முந்திச் சென்று வழி மறித்து நின்றது. அதிலிருந்துஇறங்கிய 4 பேர் துப்பாக்கி, கத்திகளைக் காட்டி மிரட்டி இந்த லாரியைக் கடத்திச் சென்றனர். அவர்களிடம்வாக்குவாதம் செய்த டிரைவரையும கிளீனரையும் அந்தக் கும்பல் தாக்கியது.
இதையடுத்து லாரியை ஒரு காட்டுப் பகுதிக்குள் அந்தக் கும்பல் ஓட்டிச் சென்றது. பின்னாடியே அந்தக்கடத்தல்காரர்களின் லாரியை இரண்டு பேர் ஓட்டி வந்தனர். காட்டு பகுதிக்குச் சென்றவுடன் பணத்தைத் தருமாறுஅக் கும்பல் கேட்டது. ஆனால், பணம் இல்லை என்று டிரைவர் ஆனந்தன் கூற அவரைத் தாக்கினர்.
நீ பணம் வைத்திருப்பது எங்களுக்குத் தெரியும், அதை லாரியில் எங்கு ஒளித்து வைத்திருக்கிறார் என்று அக் கும்பல்கேட்டபோது அதை சொல்ல மறுத்தார் டிரைவர். இதையடுத்து அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவருக்குகையில் காயம் ஏற்பட்டது.
அவரைக் காப்பாற்ற முயன்ற கிளீனர் வெங்கடாசலத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர். பின்னர்அவர்களாகவே தேடி லாரியில் இருந்த ரூ. 35,000த்தை எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து கீழிறங்கிய அந்தக் கும்பல் லாரியின் சக்கரங்களைக் கழற்றி தாங்கள் வந்த லாரியில் ஏற்றிக்கொண்டனர். பின்னர் கிளானரையும் டிரைவரையும் கயிற்றால் கட்டி புதருக்குள் உருட்டிவிட்டுதப்பியோடிவிட்டனர்.
பலத்த வெட்டுக் காயம் பட்ட கிளீனர் வெங்கடாசலம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கையில் குண்டுக் காயம் அடைந்த டிரைவர் ஆனந்தன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிப்சம் வாங்குவதற்காக டிரைவர் பணம் கொண்டு வந்திருந்ததையும் மீதிப் பணத்தை அவர் திரும்ப எடுத்துச்செல்வதையும் அறிந்த ஒரு கும்பல் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கும் அளவுக்கு தமிழகம் முன்னேறி இருப்பது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்து.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications