தமிழ் அகதிகள்: சென்னை வந்தார் இலங்கை அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களை மீண்டும் நாடு திரும்பச் செய்வது குறித்து விவாதிக்க அந்நாட்டு மறுவாழ்வுத்துறை மற்றும் அகதிகள் நலத்துறை அமைச்சர் ஜெயாலே ஜெயவத்தனே இன்று சென்னைவந்தார்.

பெரும்பாலான அகதிகள் முகாம்களையும் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுடன் பேசவுள்ள அவர் முதல்வர்ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால் அங்கு அமைதிதிரும்பியுள்ளது. விரைவில் புலிகளுடன் இலங்கை அரசு பேச்சு நடத்தவும் திட்டமிட்டிருப்பதால் தமிழகத்தில்அகதிகளாக குடியேறிய ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் மீண்டும் நாடு திரும்ப ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

பல்லாண்டுகளுக்கு முன் இனப் பிரச்சனை வெடித்தபோது சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் படகுகள்மூலம் தமிழகத்தில் குடியேறினர். இவர்களில் 66,000 பேர் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 111 அகதிகள்முகாம்களில் தங்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையும் மத்திய, மாநில அரசுகளும் இவர்களுக்கு உதவிவருகின்றன.

மற்றவர்கள் வெளியிடங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் தமிழகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர்.

இப்போது அந் நாட்டில் அமைதி திரும்பியுள்ளதால் மீண்டும் தங்கள் நாட்டுக்குக்குத் திரும்ப பெரும்பாலானதமிழர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்களை இலங்கை திரும்ப அனுமதிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பாய்கொண்டு போய் விட வேண்டும் எனவும் பல அகதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து மத்திய அரசு மூலமாக இந்த மறுகுடியேற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு துவக்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அந் நாட்டு அமைச்சர் ஜெயாலே ஜெயவர்த்தனே இன்று சென்னை வந்தார். அவர் ஐ.நா.அகதிகள் பிரிவு தூதர், மத்திய குடியேற்றத்துறை அதிகாரிகள், தலைைமச் செயலாளர் சுகவனேஸ்வர், மாநிலகாவல்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்.

9 நாட்கள் இங்கு தங்கியிருக்கும் அவர் பெரும்பாலான அகதிகள் முகாம்களை நேரில் சென்று பார்வையிடுகிறார்.முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், இத்தனை ஆண்டுகள் எங்கள் மக்களை வைத்துகவனித்துக் கொண்டதற்காக இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக வழிமுறைகள் குறித்தும் விவாதிப்பார். இதற்காகதூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு இலவசமாக கப்பல்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும்எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+