காவிரிப் பிரச்சனையில் வாஜ்பாய் தலையீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதையடுத்து தமிழக, கர்நாடக முதல்வர்களை அழைத்துப் பேச பிரதமர்வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மத்திய நீர் வளத்துறை அமைச்சர் அர்ஜூன்சரண் சேத்தி மற்றும் அதிகாரிகளுடன்வாஜ்பாய் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழக, கர்நாடக அணைக் கட்டுகளில் கடந்த 10 ஆண்டுகளில் இருந்த நீரின் அளவு, கர்நாடகத்தின்மழை அளவு, விவசாய நிலத்ததை அந்த மாநிலம் எந்த அளவுக்கு விரிவாக்கியது போன்ற விவரங்களை தனக்குத்தருமாறு அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டர்.

இதைத் தொடர்ந்து பிரதமரிடம் சில விவரங்களை அதிகாரிகள் தந்தனர். அதில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தஆண்டுதான் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு மிகக் குறைவாக இருந்ததாகவும் கிருஷ்ணராஜசாகர்அணையில் 0.325 டி.எம்.சி. நீர் தான் உள்ளதாகவும் அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் டெல்லிக்கு அழைத்துப்பேச பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

தேவைப்பட்டால் காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டவும் வாஜ்பாய் திட்டமிட்டிருப்பதாதக் கூறப்படுகிறது.காவிரி நதி நீர் ஆணையத்துக்கு பிரதமர் தான் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த ஆணையத்தால் தமிழகத்துக்கு எந்தப் பலனும் இல்லை என ஜெயலலிதா கூறிவிட்டதுகுறிப்பிடத்தக்கது. இனி இந்த ஆணையத்தை மதிக்கப் போவதில்லை என்றும், இந்த ஆணையத்தை புறக்கணிக்கப்போவதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடகம் தயாராக இருந்ததாகவும், ஆனால், ஆணையத்தைபுறக்கணித்து கர்நாடகத்துக்கு எதிராக வழக்குத் தொடர ஜெயலலிதா முடிவு செய்ததால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

காவிரி ஆணையத்தை புறக்கணிக்கும் முடிவை வாபஸ் பெறச் செய்ய ஜெயலலிதாவுடன் பேசவும் வாஜ்பாய்திட்டமிட்டுள்ளார். அவரை சமாதானப்படுத்திய பிறகு ஆணையத்தின் கூட்டத்தை வாஜ்பாய் கூட்டுவார் எனபிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+