குருப் பெயர்ச்சி பலன்கள்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் முடிய):
இதுவரை உங்கள் ராசியில் 3ம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது நான்காமிடத்துக்குச் செல்கிறார். நான்காம் இடத்தால் மிகப் பெரிய நன்மைகள்தரப் போவதில்லை என்பது உண்மை. ஆனால், 3ம் இடத்தை விட 4ம் இடம் பரவாயில்லை.
அதிர்ஷ்டம் என்பது அளவோடு இருக்கும். சிலருக்கு அதிரடி மாற்றங்கள் வரும். ஆனால், பெரும்பான்மையானவர்களுக்கு இயல்பான நிலை தான்இருக்கும்.
பணம் வருவது மிகப் பெரிய அளவில் அதிகரிக்காது. ஓரளவுக்கு தன லாபம் வந்தாலும் செலவுகளும் கூடலாம்.
குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில பிரச்சனை ஏறபடுவதால் வியாபாரத்தில் சிக்கல் உண்டாகும்.
உங்கள் ராசியின் அதிபதி அங்காரகனின் வீடு என்பதால் பிறர்க்கு வருவது மாதிரி பெரிய பிரச்சனைகள் உங்களுக்கு வந்துவிடாது.
ஆகஸ்ட் 22ம் தேதி ஏழரைச் சனியில் இருந்து நீங்கள் விடுதலையாகிவிடுகிறீர்கள். இதன் பிறகு செப்டம்பர் முதல் ஏற்றமான நிலை உருவாகும்.உத்தியோகஸ்தர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. இட மாற்றம், தொழில் மாற்றங்களை சந்திப்பீர்கள். நீடித்து வரும் நோய்களில் இருந்து விடுதலைகிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
டிசம்பர் 13ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும்.
வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
ரிஷபம் (கார்த்திகை 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதம் முடிய):
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் இப்போது மூன்றாம் இடத்துக்கு வருகிறார்.
இந்தப் பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது. தனஸ்தான குரு கடைசி நேரத்திலாவது பணத்தைக் காட்டிவிடுவார். இதனால், பெரியஅளவில் நிதிப் பிரச்சனைகள் எல்லாம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரப் போகிறார் குரு பகவான்.
திரும்பும், திருமணம் நடப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் விலகப் போகின்றன. காதல் திருமணங்களுக்கும் இரு வீட்டாரும் அனுமதி தரும் நல்ல சூழ்நிலைகள்உருவாகும்.
11ம் இடமான லாபஸ்தானத்தை குரு பார்ப்பதாலும் சுக்கிரனனின் ஆதிக்கத்தாலும் பணப் புழக்கம் அதிகரிப்பதோடு, சில அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கும்இடமுண்டு. ஏகபபட்ட பிரயாணமும் உண்டாகும்.
உங்கள் ராசியில் ராகு பகவான் நீசமாகவும் கேது பகவான் உச்சமாகவும் சஞ்சரிப்பதால் எல்லாமே குழப்பாக இருக்கும். கருத்து வேறுபாடுகளும்ஏற்படலாம். டென்சன் இருந்து கொண்டே இருக்கும். ஏழரை நாட்டுச் சனியில் பிடியில் இருக்கும் நீங்கள் அதிலிருந்து வெளியேற இன்னும் இரண்டரைவருடமாகும்.
இவ்வளவு இருந்தாலும் குருவின் இடப் பெயர்ச்சி மனதில் தைரியத்தை அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகமும் உருவாகும். உல்லாசம், ஆடம்பரத்துக்கும்குறைவிருக்காது.
குருவுக்கு மூன்றாம் இடம் உகந்ததல்ல. ஆனாலும் அவர் ஒரு சுப கிரகம். எந்தவிதமான பெரும் தீங்குகளையும் தரவே மாட்டார். அவரை வணங்கிநலம் பெறுங்கள்.
மிதுனம் (மிருகசீரிஷம் 2,3ம் பாதம் முடிய, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம் வரை):
இதுவரை உங்கள் ராசியில் சஞ்சாரித்து வந்த குருபகவான் இனி உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்துக்கு மாறுகிறார். ஜென்ம ராசியில் இருந்தவரைஉங்களை முன்னாலும் போக விடாமல் பின்னுக்கும் வந்துவிடாமல் தடுமாற வைத்தார் குரு பகவான்.
இரண்டாவது இடத்துக்கு பிரவேசித்தன் மூலம் மிகப் பெரிய மாறுதல்களையும் தன லாபத்தையும் தரப் போகிறார் குரு பகவான். வருமானம் பெருகுவதுமட்டுமல்லாமல் பலவிதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரப் போகிறது.
தைரியமும் மன வலிமையும் பல மடங்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்ட வெற்றிகளைக் குவிப்பீர்கள். தடைபட்ட திருமணங்கள் கைகூடும். பொன்,பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
தொழில்ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்களே வியக்கும் அளவுக்கு நல்ல பல விஷயங்கள் நடந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இனி நல்ல காலம்தான். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குழந்தைகள் பிறப்பு போன்ற ஆனந்த சம்பவங்களுக்கு நிறையவே சான்ஸ் உள்ளது.
பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் ஆகியவற்றுக்கு நிறைய வாய்ப்புண்டு. உயர் கல்விக்கும் நல்ல வாய்ப்புள்ளது.
ராகு பகவான் விரயஸ்தானத்தில் நீசமாகவும், கேது பகவான் உச்சமாகவும் சஞ்சரித்து வந்ததால் பல வகைகளில் பண விரயம் உண்டாகி வந்தது. இதனால்நொந்து போய் இருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி நல்ல பல மாற்றங்களைத் தந்து முன்னேற்றப் போகிறது.
(நாளை அடுத்த 3 ராசிகளுக்கு...).
குருப் பெயர்ச்சி
கிரஹங்களிலேயே ஸ்ரீ குருகவான் சுபக் கிரஹம் ஆவார். பொன் கிரஹம். நல்லதையே செய்பவர்.
ஆண்டுதோறும் நடக்கும் குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு 04.07.2002ம் தேதி, வியாழக்கிழமை. இரவு 10.22மணிக்கு மிதுன ராசியிலிருந்து இடம் பெயர்நது கடக ராசிக்கு பிரவேசிக்கிறார். இங்கு 25.08.2003 தேதி,திங்கள்கிழமை வரை இருப்பார்.
வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜூன் 30ம் தேதி குருப் பெயர்ச்சி நடக்கப் போவதாக கூறுகிறார்கள். கோளாரசஞ்சாரப்படி அடுத்த மாதம் 4ம் தேதி தான் குருப் பெயர்ச்சி.
குருவின் ஸ்தலம்: ஆலங்குடி. தட்சிணாமூர்த்தியாக இங்கு எழுந்தருளியிருக்கிறார் குரு பகவான். இந்தத் தலம்தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இது ஒரு பரிகாரத் தலமாகும். இங்கு பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் இக்கோவிலை 24 முறை சுற்றி வரவேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு நெய் தீபம் ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் காலம் மாலை 4 மணிமுதல் மாலை 6 மணி வரை. குருபகவானின் மூல மந்திரம் 24 வார்த்தைகளைக் கொண்டது. இதனால் இந்தஆலயத்தில் எல்லாமே 24 முறைகள் செய்யப்படுகின்றன.
தனுர் ராசியம், மீன ராசியும் இவரது ராசிகள். பூராடம் இவரது நட்சத்திரம். சிலர் அவிட்டம் என்றும் கூறுவதுண்டு.
குருவுக்கு வெண்மை நிறைந்த பசுவின் பால் மிகவும் பிடித்தமானது. பால், பால் கர்க்கரை கலந்த இனிப்புப்பொங்கல், தயிர் சாதம், வெள்ளை கொண்டைக் கடலை ஆகியவை இவருக்கு உரிய நிவேதனங்கள்.
பசும்பொன் வண்ணம் கொண்டவர். பணத்துக்கு நாயகனாக விளங்குபவர் குரு. மேஷம், சிம்மம், கன்னி,விருச்சிகம் ஆகியவை இவரது நட்பு ராசிகள்.
வழிபடும் முறை:
குருவை பெயர்ச்சிக்கு முன்னதாகவே வழிபட்டுவிட வேண்டும். குருப் பெயர்ச்சி ஹோமங்களில் பங்கேற்பது நலம்தரும்.
குரு பாமாலை:
குருவை வழிபட இந்தப் பாமாலையை மனம் ஒன்றி படியுங்கள். அவரது பூரண அருள் கிடைக்கும்.
பாமாலை:
வானவர் கரசே வளம் தரும் குருவே
காணா இன்பம் காணவைப் பவனே
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்
உந்தனுக் களித்தால் உள்ளம் மகிழ்வாய்
சுண்டல் தான்யம் சொர்ணாபிஷேகமும்
கொண்டுனை வழிபட குறைகள் தீர்ப்பாய்
நாளைய பொழுதை நற்பொழு தாக்குவாய்
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்
உள்ளத்தில் அமைதி உறைந்திடச் செய்வாய்
தலைமைப் பதவியும் தக்கதோர் புகழும்
நிலையாய்த் தந்தே நிம்மதி கொடுப்பாய்
தவப்பயனால் உன் தாளினைப் பணிந்தேன்
சிவப்பிரியா நீ திருவருள் தருவாய்
-->












Click it and Unblock the Notifications