மிகச் சிறப்பாய் நடந்து முடிந்த திருவண்ணாமலை கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடந்துமுடிந்தது.
26 ஆண்டுகளுக்குப் பின்னர் இக் கோவிலின் மகாகும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதற்காக ரூ. 5.5 கோடிசெலவிடப்பட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டது.
கடந்த 19ம் தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று 8ம் கால யாகசாலைப் பூஜைகளுடன் பரிகாரதெய்வங்களுக்கு குடமுழுக்கு நடந்தது.
இன்று ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கு காலை 9.17 மணிக்கு குடமுழுக்கு நடந்தது.
ராஜகோபுரத்துக்கும், மூலவர் கோபுரத்துககும் குடமுழுக்க நடந்த அதே நேரத்தில் திருவண்ணாமலை தீபம்ஏற்றப்படும் மலைச் சிகரத்துக்கும் புண்ணிய நீரால் குடமுழுக்கு செய்யப்பட்டது.
இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.
பின்னர் கோபுர கலசங்களுக்கு பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன.
அப்போது பக்தர்கள் அண்ணாமலையானுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.
ராஜகோபுரத்தின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டபோது கருடன் கோபுரத்தை சுற்றி வந்தது. இது மிக நல்ல சகுனம்என்பதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
சங்கராச்சாரியாருக்கு கொலை மிரட்டல்:
திருவண்ணாமலை கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் காஞ்சி சங்கராச்சாரியாரை கொல்வோம் என மிரட்டல்கடிதம் வந்துள்ளதையடுத்து அவருக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அல்-உம்மா தீவிரவாதி இமாம் அலியின் கூட்டாளிகள் இந்தக் கடிதத்தை காஞ்சி மடத்துக்கு அனுப்பியுள்ளனர்என போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், இதையும் மீறி ஜெயேந்திரரும் விஜேயந்திரரும் இந்த விழாவில் இன்று கலந்து கொண்டுள்ளனர்.அவர்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
998 கூடுதல் பஸ்கள்:
இந்த விழாவையொட்டி தமிழகத்தின பல பகுதிகளில் இருந்தும் 998 சிறப்புப் பேருந்துகளும் சிறப்பு ரயிகளும்இயக்கப்பட்டு வருகின்றன.
நகருக்குள் லாரிகள் உள்ளிட்ட பிற கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 தாற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததால் 5,000போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கான ரகசிய போலீசாரும் கூட்டத்தோடு கூட்டமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மோப்ப நாய்களைக் கொண்டு ஆங்காங்கே சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications