ஆலந்தூர் நகராட்சியில் வன்முறை: நாற்காலிகள் வீச்சு, மைக்குகள், பேன்கள் உடைப்பு
ஆலந்தூர்:
சென்னை ஆலந்தூர் நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
சேர்களையும் மைக்குகளையும் உடைந்து வீசினர். சேர்களைத் தூக்கி மேலே சுற்றிக் கொண்டிருந்த மின் விசிறிகள்மீது வீசினர். இதில் மின் விசிறிகள் உடைந்து சிதறின.
சமூக நலத்துறை அமைச்சரும் ஆலந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான பா.வளர்மதியின் தூண்டுதலின்பேரில்தான் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகத் தெரிகிறது.
கடந்த சில நாட்களாக திமுக ஆட்சியில் உள்ள நகராட்சிகளில் அதிமுக கவுன்சிலர்கள் கலாட்டா செய்துவருகின்றனர். இந் நிலையில் திமுக ஆட்சியில் உள்ள ஆலந்தூர் நகராட்சியில் இந்தக் கலவரம் நடந்துள்ளது.
இன்று காலை நகராட்சியின் மாதந்திரக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் அமைச்சர்வளர்மதி ஆலந்தூர் பகுதிக்கு வந்ததாகவும் அவர் அந்தப் பகுதி அதிமுகவினருடனும் கவுன்சிலர்களுடனும்ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் வளர்மதி என்ன சொல்லிவிட்டுப்போனார் என்று தெரியவில்லை.
இதன் பின்னர் நகராட்சிக்கு வந்த அதிமுகவினர், ஸ்டாலின் பதவிப் பறிப்புக் காரணமாக இருந்த ஒரு நபர் ஒருபதவி சட்டம் கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரினர்.
நகராட்சியின் தலைவராக உள்ள திமுக பிரமுகரான ஆர்.எஸ்.பாரதி, இது தொடர்பாக வழக்கு விசாரானை நடந்துவருவதால் அடுத்தக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கலாம் என்றார்.
இதையடுத்து அதிமுகவினர் நாற்காலிகளை எடுத்து வீசினர். எல்லா பக்கமும் நாற்காலிகள் பறந்தன.மைக்குகளைப் பிடுங்கி திமுகவினர் மீது எறிந்தனர்.
திமுகவினரும் பதிலுக்கு நாற்காலிகளை வீசினர்.
இந் நிலையில் சில அதிமுக கவுன்சிலர்கள் நாற்காலிகளைத் தூக்கி பேன்களின் மீது வீசினர். சுற்றிக் கொண்டிருந்தபேன்களில் அடிபட்ட நாற்காலிகள் சுவர்களில் மோதி சிதறி விழுந்தன.
மேயரின் சேரையும் அதிமுகவினர் தூக்கி எறிந்தனர். அவரது டேபிளில் இருந்து பேப்பர் வெயிட்டுகளைத் தூக்கிவீசிய அதிமுகவினர், பின்னர் அந்த டேபிளையும் உடைத்தெறிந்தனர்.
பேன்களும் உடைந்து தொங்கின. இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. நீண்ட நேரம் நடந்த இந்த மோதலால்நகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனு கொடுக்க வந்திருந்த மக்கள் பயந்து போய் ஓடினர்.
பெண் கவுன்சிலர்கள் அலறியடித்துக் கொண்டு நகராட்சி மன்றத்துக்கு வெளியே ஓடினர்.
இந்தச் சம்பவம் குறித்து நகராட்சிகள் துறை செயலாளரிடம் புகார் மனுத் தரப்படும் என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications