அமைச்சராக விருப்பமில்லை: ஜனா. கிருஷ்ணமூர்த்தி
டெல்லி:
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி பதவி விலக ஒப்புக் கொண்டுவிட்டார். அவரதுவிருப்பதையும் மீறி அவரை அமைச்சராக்குகிறார் பிரதமர் வாஜ்பாய்.
அதே போல மத்திய அமைச்சர் அத்வானி துணைப் பிரதமர் ஆவதும் நிச்சயமாகிவிட்டது.
கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்து வந்த ஜனா நேற்றிரவு வாஜ்பாயின் நெருக்குதலுக்குப் பணிந்தார்.அவருக்குப் பதிலாக கட்சியின் இளைய தலைவர்களில் ஒருவரான வெங்கைய்யா நாயுடு கட்சியின்தலைவராகிறார். இதற்காக நாயுடு அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறார்.
ஜனா கோபம்:
தன்னை நெருக்குதல் மூலம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதற்கு ஜனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
நான் கட்சியில் இருக்க விரும்பினேன். ஆனால், நான் அரசுக்கு வர வேண்டும் என்று வாஜ்பாய் விரும்புகிறார்.நான் அமைச்சரானால் அரசு பலப்படும் என்று வாஜ்பாய் கருதுகிறார். கட்சித் தலைவராக சரியாக செயல்படாததால்என்னை நீக்கியதாக நினைக்கக் கூடாது. எனக்கு மத்திய அமைச்சராக விருப்பம் இல்லை.
பிரதமரின் ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ராவும், மூத்த தலைவர் பைரோன்சிங் செகாவத்தும் தொடர்ந்து என்னைஅமைச்சராக வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அமைச்சராவது குறித்த எனது நிலையைமறுபரிசீலனை செய்து வருகிறேன் என்றார்.
ஆரம்பத்தில் இருந்தே ஜனா. கிருஷ்ணமூர்த்தி ஒதுக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு எடுக்கும்முக்கிய முடிவுகள் குறித்துத் தன்னுடன் பிரதமர் ஆலோசிப்பதில்லை என கிருஷ்ணமூர்த்தி கூறி வந்தார். இவர்தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்வானி துணைப் பிரதமர்:
இந் நிலையில் இன்று லக்னெவில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் வாஜ்பாய்,
அமைச்சரவையில் பெரும் மாற்றம் செய்யப்படும். பல மூத்த அமைச்சர்களும் கட்சிப் பணிக்குத் திரும்புவார்கள்.பல கட்சி நிர்வாகிகள் அமைச்சர்களாக்கப்படுவார்கள்.
அரசின் செயல்பாட்டை மேலும் தீவிரமாக்க இந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
துணைப் பிரதமராக ஒருவரை நியமிக்க உள்ளோம். இது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன்ஆலோசனை நடத்தி வருகிறோம்.
பாட்டாளி மக்கள் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தரப்படும்.
கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட ஆட்சி நடத்துவது ரொம்ப கஷ்டமானது. ஆனால், இன்றைய நிலையில்கூட்டணிக் கட்சி தான் ஆட்சி தான் சாத்தியமாக உள்ளது.
முதலில் காஷ்மீர் முதல் பரூக் அப்துல்லாவுக்கு துணை ஜனாதிபதி பதவி தர திட்டமிட்டிருந்தோம். ஆனால், அப்துல்கலாம் ஜனாதிபதியாவதையடுத்து அவருக்கு இந்தப் பதவி தர இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது என்றார் வாஜ்பாய்.அமைச்சரவை மாற்றம்: பா.ஜ.கவில் மாபெரும் குழப்பம்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications