ஸ்டாலின் ஊர்வத்தில் விதிமுறை மீறல்: திமுகவுக்கு போலீஸ் நோட்டீஸ்
சென்னை:
மேயர் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து ஸ்டாலின் நடத்தி வரும் ஊர்வலங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகதிமுகவுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து இனிமேல் விதிமுறையை மீற மாட்டோம் என திமுக தரப்பில் உறுதிமொழி தரப்பட்டுள்ளது.
முதலில் சென்னை நகரில் தடையுத்தரவு அமலில் இருப்பதால் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டது. பின்னர்வேனில் செல்லலாம் என்றும், ஆனால் மைக், ஒலிப்பெருக்கியை பயன்படுத்தக் கூடாது, வாகன ஊர்வலமாகசெல்லக் கூடாது, போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆனால், ஸ்டாலின் தொடர்ந்து நடத்தி வரும் ஊர்வலங்களில் மைக் கட்டி பேசி வருகிறார் என்று குற்றம்சாட்டியுள்ள போலீசார் இது குறித்து விளக்கம் தருமாறு திமுக தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
விதிமுறைகளை ஸ்டாலின் மீறியது தொடர்பாக தங்களிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் போலீசார்தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் பலராமன் நேற்று சென்னை போலீஸ் கமிஷ்னர்அலுவலகத்தில் ஆஜரானார். போலீசாரிடம் அவர் நோட்டீசுக்கு விளக்கம் தந்தார்.
தொண்டர்களின் உற்சாகத்தால் தான் விதிமீறல் நடந்து விடுகிறது. குழாய் மைக்செட்டுகளுக்கு பதிலாக இனிமேல்பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்துவோம் என்று பலராமன் எழுதித் தந்தார்.
நிபந்தனைகளை மீண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவரிடம் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இந் நிலையில் அடுத்த மாதம் 17ம் தேதி வரை சென்னையில் அனைத்துத் தொகுதிகளிலும் இது போன்ற ஊர்வலம்நடத்த ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications