மத்திய அமைச்சர் பதவிக்கு பா.ம.க. சார்பில் சண்முகம், பு.த. இளங்கோவன் பெயர்கள் பரிந்துரை
டெல்லி:
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சண்முகம், பு.த.இளங்கோவன் ஆகிய இருவரும் மத்திய அமைச்சர்களாவர்என்று தெரிகிறது.
இன்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரதமர் வாஜ்பாயை சந்தித்து தனது கட்சியின் சார்பில்அமைச்சர்களாக்கப்பட உள்ளவர்கள் குறித்து விவாதிக்கிறார்.
இதில் சண்முகம் ஏற்கனவே மத்திய நலத்துறை இணையமைச்சராக இருந்தவர். பு.த.இளங்கோவனைப்பொறுத்தவரை அக் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவர். ராமதாசின் மகன் அன்புமணியின் ஆதரவைப்பெற்றவர் இவர்.
நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டசுடன் ராமதாஸ் ஆலோசனைநடத்தினார்.
பிரதமரை சந்திக்கும்போது காவிரியில் நீர் திறந்துவிடக் கோரி கர்நாடகத்தை வற்புறுத்துமாறு ராமதாஸ் கோரிக்கைவிடுப்பார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தனது கட்சிக்கு கேபினட் அந்தஸ்து கிடைப்பது சந்தேகமே என்பதால் 2 இணையமைச்சர் பதவிகளை அவர்கேட்டுள்ளர். அதில் ஒரு பதவி தனிப்பொறுப்புடன் கூடியதாக இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைப்பார்என்று தெரிகிறது.
எஙகள் கட்சிக்கு எந்த அமைச்சர் பதவியைத் தருவது என்பது குறித்து பிரதமர் வாஜ்பாய் தான் முடிவு செய்வார்என்று டெல்லியில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications