எல்லா ஊர்களிலும் கண்ணகி சிலை: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்ணகியின் சிலையை நிறுவுமாறு திமுக தலைவர்தலைவர் கருணாநிதி தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதே போல திமுகவின் அனைத்துக் கூட்டங்களிலும் இனி கண்ணகி கட்-அவுட்டை அலங்காரம் செய்து வைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முதல்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞர் அணி கட்டடமான அன்பகத்தின் முன்கண்ணகி சிலையை நிறுவ உள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.
அபசகுனமாகக் கருதியதால் தான் ஆளும் கட்சியினர் இந்தச் சிலையை அகற்றியதாக முன்பு குற்றம் சாட்டினார்கருணாநிதி. இந் நிலையில் எல்லா ஊர்களிலும் சிலையை நிறுவப் போவதாக அறிவித்துள்ளார்.
இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
தமிழின் பாரம்பரிய பெருமையை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் உலகத் தமிழ்மாநாட்டின்போது அறிஞர் அண்ணாவால் சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை நிறுவப்பட்டது. இதுதங்களுக்கு தோதுப்படாததால் ஆட்சியாளர்கள் அகற்றினர்.
இப்போது வழக்கு நிலுவையில் இருப்பதாகச் சொல்லிசிலையை மீண்டும் நிறுவ விடாமல் தடுத்து வருகின்றனர்.
இதனால், தமிழகத்தின் அனைத்துத் தலைநகர்கள், முக்கிய நகரங்களில் கண்ணகியின் சிலையை முக்கியஇடங்களில் நிறுவ திமுகவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக நடத்தும் அனைத்துப் பொதுக் கூட்டங்களிலும் இனி கண்ணகியின் கட்-அவுட்டை வைக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
இலங்கை அமைச்சர் சந்திப்பு:
இன்று அவரை இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனே நேரில் சந்தித்துப்பேசினார். குடிபெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துச் செல்வது குறித்தும்,புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்தும் அவர் கருணாநிதியிடம் விளக்கினார்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications