எல்லா அகதிகளையும் திரும்ப அழைப்போம்: இலங்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடிபெயர்ந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் இலங்கைக்குமீண்டும் அழைத்துச் செல்லப்படுவார்கள் என அந் நாட்டின் அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஜெயலத்ஜெயவர்த்தனே கூறினார்.

கடந்த 9 நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான அகதிகள் முகாம்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்த அவர்தமிழக முதல்வர் ஜெயலலிதா, அகதிகள் நல்வாழ்வு அமைச்சர் தம்பிதுரை, திமுக தலைவர் கருணாநிதிஆகியோரையும் அதிகாரிகள், காவல்துறையினர், தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் ஆகியோருடன்ஆலோசனை நடத்தினார்.

இன்று இலங்கை திரும்பும் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

இங்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள அனைத்துத் தமிழர்களும் சரியான நேரத்தில் மீண்டும் இலங்கைக்குஅழைத்துக் கொள்ளப்படுவார்கள். வட இலங்கைப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும்பணி முழு வேகத்தில் நடந்து வருகிறது.

இந்தப் பணி முடிவடைய வேண்டும். அங்கு நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும். இதைத் தொடர்ந்து சரியானநேரத்தில் அகதிகளை திரும்ப அழைப்போம். மீண்டும் அகதிகளாக இவர்கள் தமிழக்ததில் குடியேறும் நிலைஏற்படக் கூடாது என்பதில் நாங்கள் மிகத் தீவிரமாக இருக்கிறோம்.

அதே போல இலங்கையின் பல இடங்களிலும் உள்ள தமிழ் அகதிகளும் அவர்கது பகுதியில் மீண்டும்குடியமர்த்தப்படுவார்கள் என்றார் ஜெயலத்.

புலிகள் தலைமையில் இடைக்கால அரசு:

இந் நிலையில் தமிழகம் வந்த இன்னொரு இலங்கை அமைச்சரான அபுத்ல் ஹமீத் அசர் கூறுகையில்,

இலங்கையில் விரைவில் முழு அமைதி திரும்பிவிடும். வட-கிழக்குப் பகுதியில் இடைக்கால அரசு அமைப்பதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும். இதை சில கட்சிகள் தவிர பெரும்பான்மையானகட்சிகள் ஆதரிக்கும். இதனால் இந்தத் தீர்மானம் நிச்சயம் நிறைவேறும்.

தாய்லாந்தில் பேச்சவார்த்தை தொங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் புலிகள் மீதான தடை நீக்கப்படும். இலங்கையில்இயல்பு நிலை திரும்ப இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஒவ்வொரு தமிழ் மகனின் ஆதரவும் தேவை என்றார்அசர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+