தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த முகமூடி கும்பல் கைது
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இரு தினங்களுக்கு முன் அதிகாலையில் வீட்டில் நுழைந்து கணவன்,மனைவியை கட்டிப் போட்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 4 பேர் கும்பலில் இருவர்பிடிபட்டுள்ளனர்.
கொள்ளை நடந்த 48 மணி நேரத்தில் அந்தக் கும்பலைப் பிடித்து போலீசார் சாதனை படைத்துள்ளனர்.
ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி. கார்டன் காலனியில் வசித்து வருபவர் முருகன். இவர் ஒரு தனியார்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 29ம் தேதி அதிகாலை 3 மணிக்கு இவரது வீட்டில் நுழைந்த 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பல்முருகனையும் அவரது மனைவி வனிதா தேவியையும் கட்டிப் போட்டுவிட்டு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 20 பவுன்நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
வனிதா தேவி அணிந்திருந்த செயின், கம்மலையும் கத்தி முனையில் பறித்துச் சென்றனர்.
முருகன், வனிதா தேவி, அவர்களது மகனை பெட்ரூமுக்குள் தள்ளிச் சென்று கயிறுகளால் கட்டிலோடு சேர்த்துகட்டிப் போட்டுவிட்டு இவர்கள் தப்பினர்.
இது குறித்து விசாரணை நடத்திய ராஜா அண்ணாமலைபுரம் போலீசார் சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தமதுசூதனன், செல்வம் ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களது கூட்டாளிகள் இருவரையும் தேடிவருகின்றனர்.
தப்பிச் செல்லும்போது துணியைக் கொண்டு கைரேகைகளை மிக ஜாக்கிரதையாக இக் கும்பல் அழித்துவிட்டுச்சென்றது. ஆனாலும் தனிப் படை போலீசார் இவர்களை 2 நாட்களில் பிடித்துவிட்டனர்.
இவர்களிடம் இருந்து வனிதா தேவியிடம் இருந்து பறிக்கப்பட்ட தாலி செயின், கம்மல் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.
இவர்களிடம் இருந்து பட்டாக் கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கத்திகளைக் காட்டித் தான் தம்பதியைஇவர்கள் மிரட்டினர்.
பிற நகைகள் தலைமறைவாக உள்ள இருவரிடம் உள்ளது. அவர்களை பிடிக்கும் பணியில்போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-->


Click it and Unblock the Notifications
