கொலையான தமாகா தொண்டர் உடலை பெற மறுப்பு: பாண்டியில் பதற்றம் தொடர்கிறது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களால் நடு ரோட்டில் கொலை செய்யப்பட்ட த.மா.கா.தொண்டரின் உடலைப் பெற அக் கட்சியினர் மறுத்துவிட்டனர். இதனால் அந்த உடல் மருத்துவமனையிலேயேவைக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ. ராஜவேலுவையும் இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்காதவரை உடலைப் பெறமாட்டோம் என கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும்கூறிவிட்டனர்.
ஆனால், பாண்டிச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் சட்டமன்ற தலைமைக் கொறடாவாக ராஜவேலு உள்ளார்.இதனால் அவர் மீது அரசு வழக்குத் தொடருமா என்பது சந்தேகம் தான்.
இந் நிலையில் நேற்றைய தாக்குதலில் பலத்த காயமடைந்த மேலும் 2 காங்கிரஸ் தொண்டர்களில் சுப்பிரமணியம்என்பவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
பாண்டிச்சேரி பாகூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜவேலுவின் ஆதரவாளர்களுக்கும் முன்னாள்அமைச்சரும் த.மா.கா பிரமுகருமான கந்தசாமியின் ஆட்களுக்கும் இடையே நேற்று பயங்கர கோஷ்டி மோதல்நடந்தது.
கந்தசாமியின் ஆதராவளர்களை ராஜவேலுவின் ஆட்கள் தாக்கினர். இதில் த.மா.கா. தொண்டரான அமிர்தலிங்கம்என்பவர் நடு ரோட்டில் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்.
எம்.எல்.ஏ. ராஜவேலுவைக் கைது செய்தால் தான் அமிர்தலிங்கத்தின் உடலைப் பெறுவோம் என த.மா.காவினர்கூறிவிட்டனர். இதனால் அந்த உடல் மருத்துவமனையிலேயே கிடத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்தக் கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.ராஜவேலு மீது எந்த விதமான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் இருந்தே இரு தரப்பினருக்கும் இடையே பகை இருந்து வந்தது. ராஜவேலுவிடம் கந்தசாமிதோற்றார்.
இந் நிலையில் ராஜவேலுவின் சதோதரரின் மகன் கந்தசாமியின் உறவினரின் மகளைக் காதலித்து வந்துள்ளார். சிலதினங்களுக்கு முன் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்தது. ராஜவேலுவின் ஆட்கள் கந்தசாமியின்ஆட்களை தாக்கினர். இது தொடர்பாக கந்தசாமியின் ஆட்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அவர்கள் காவல் நிலையத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவர்களை ராஜவேலுவின் ஆட்கள்வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் கந்தசாமியின் ஆதரவாளரான அமிர்தலிங்கம்கொல்லப்பட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications