திமுகவுடன் தெளிவான, நிலையான உறவு: வெங்கையா நாயுடு
சென்னை:
தேசிய அளவில் பாரதீய ஜனதாக் கட்சியின் நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
பா.ஜ.க. தலைவராக பதவியேற்ற பின் முதல் முறையாக வெங்கையா நாயுடு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலைசென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கிருபாநதி தலைமையில் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வெங்கையா நாயுடு பேசுகையில்,
அகில இந்திய அளவில் பா.ஜ.க. நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. பிரதமர் வாஜ்பாய்ஆலோசனையைக் கேட்ட பின் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
திறமையும் செயல்பாடும் உள்ள தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். "ஜெனரேசன் கேப்" இல்லாமல்பார்த்துக் கொள்ளப்படும்.
அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதேபோல, 2004ம் ஆண்டு லோக் சபாதேர்தல் வரவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் வகையில் 3 அம்சத் திட்டம்நடைமுறைப்படுத்தப்படும்.
அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலம் போல பா.ஜ.க. செயல்படும். மக்கள் குறைகளை அரசிடமும்,அரசின் திட்டங்களை மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் நாங்கள் முழு மூச்சில் ஈடுபடுவோம்.
மாநில அளவிலும் பா.ஜ.க. நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வரப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுடன்எங்களது உறவு நிலையாகவும், தெளிவாகவும் உள்ளது. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஒருங்கிணைந்துசெயல்படாமல் உள்ளன. அவற்றைச் சரி செய்வேன் என்றார் வெங்கையா நாயுடு.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications