சவூதியில் குமரி மீனவர் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

சவூதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தமீனவர் ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கன்னியாகுமயைச் சேர்ந்த பல மீனவர்கள் சவூதி அரேபியாவில் இயந்திரப் படகுகளில் ஒப்பந்த அடிப்படையில்வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மகிமை தாஸ்.

நான்கு மாதங்களுக்கு முன்பு தனது கிராமத்திற்கு வந்திருந்த மகிமை தாஸ், பின்னர் மீண்டும் சவூதிக்குத்திரும்பினார். கதீப் என்ற கடலோர நகரில் தான் ஒரு இயந்திரப் படகில் அவர் வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஜூன் 29ம் தேதி மகிமை தாஸும் வேறு சில மீனவர்களும் இயந்திரப் படகில் இருந்தவாறு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது இன்னொரு படகில் வந்த சிலர் மகிமைதாஸ் இருந்த படகை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால்சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து மகிமை தாஸ் இறந்தார்.

மகிமை தாஸின் உடலை கன்னியாகுமரிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மாவட்டகலெக்டர் ககந்தீப் சிங் இந்த விஷயத்தில் உதவ வேண்டும் என்று மகிமை தாஸின் கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+