விசாரணை கேசட்டுகளை கோர்ட்டில் ஒப்படைக்க கோபால் கோரிக்கை
சென்னை:
கோபி சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் தன்னிடம் நடந்த விசாரணையின் போது எடுக்கப்பட்ட வீடியோ கேசட்மற்றும் ஆடியோ கேசட்டை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில்நக்கீரன் கோபால் மனு செய்துள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக கோபி சிபிசிஐடி அலுவலகத்தில் 10 நாட்கள் கோபாலிடம்விசாரணை நடந்தது. அப்போது போலீசார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், விசாரணை நடந்ததை வீடியோபதிவு செய்ததாகவும், ஆடியோ கேசட்டிலும் பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் வீடியோ மற்றும் ஆடியோ கேசட்டுகளை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜிடம் மனு செய்துள்ளார் கோபால். அவர் தனது மனுவில்,
கடந்த 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்த விசாரணையை போலீஸார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.ஆடியோவிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு கேசட்டுகளையும் உடனடியாக கோர்ட்டில் ஒப்படைக்குமாறு போலீஸாருக்கு கோர்ட் உத்தரவிடவேண்டும். இல்லாவிட்டால் அதில் முறைகேடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனக்கு எதிராகவும், நக்கீரன் பத்திரிகைக்கு எதிராகவும் போலீஸார் செயல்படுகிறார்கள். எனவே என்னையும் என்பத்திரிக்கையையும் அழிப்பதற்காக இந்த வீடியோ கேசட்டுகளில் முறைகேடுகள் செய்து பயன்படுத்த போலீஸார்முயற்சிக்கலாம் என்று கூறியுள்ளார் கோபால்.
மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ் ஜூலை 10ம் தேதி இந்த மனு மீது மேல் விசாரணை நடைபெறும் என்றுஅறிவித்தார். மேலும் போலீஸாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications