புலிகளுக்கு ஆதரவு: பொடா சட்டத்தில் தி.க. பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழக பிரமுகர் பாவாணன்புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டார்.
ஈரோட்டில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பாவாணன், விடுதலைப் புலிகளுக்கும், அதன் தலைவர்பிரபாகரனுக்கும் ஆதரவாக பேசினார். இதையடுத்து அவர் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு தமிழக அரசுஉத்தரவிட்டது.
இதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள பாவாணன் வீட்டுக்கு விரைந்த ஈரோடு தனிப்படை போலீஸார் அங்கு அவரைக் கைது செய்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications