முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும்: அமெரிக்காவில் இருந்து வைகோ பதில்
சிகாக்கோ:
ஜெயலலிதாவின் மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயந்துவிட மாட்டேன் என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கூறியுள்ளார்.
திருமங்கலத்தில் நான் பேசும்போது ஜெயலலிதாவின் அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்ததால் இப்போதுஎன் மீது நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா முயல்கிறார் என வைகோ கூறியுள்ளார்.
தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்பவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பல தமிழ்ச் சங்கங்கள் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அங்கு அவர்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வரும் 14 அல்லது 15ம் தேதி அவர் இந்தியா திரும்ப இருந்தார். இப்போது12ம் தேதியே சென்னை திரும்புகிறார்.
புலிகளை ஆதரித்து பேசி வரும் வைகோவை கைது செய்யப் போவதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று எச்சரிக்கைவிடுத்தார்.
வைகோ பேக்ஸ் செய்தி:
இதற்கு அமெரிக்காவில் சிகாகோ நகரில் இருந்து வைகோ பதில் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள பேக்ஸ்விவரம்:
தமிழகத்தில் அமைதியைக் கெடுக்கும் வகையில் நான் எந்தச் செயலையும் செய்யவில்லை. வன்முயைத் தூண்டும்வகையிலோ, சட்டம்-ஒழுங்குக்கு பிரச்சனை வரும் வகையிலோ செயல்படவில்லை.
என்னையும் எனது கட்சியினரையும் பொடோ சட்டத்தைக் காட்டியெல்லாம் மிரட்டிவிட முடியாது.
எதிர்க் கட்சியினரின் உரிமைகளை முடக்க அதிமுக எந்தெந்த வகையில் அராஜகத்தை அவிழ்த்துவிட்டு வருகிறதுஎன்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். பிற கட்சியினரின் ஜனநாயக உரிமையை நசுக்க முயலும்ஜெயலலிதா இப்போது பொடோவைக் காட்டி எங்களை மிரட்டுகிறார்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொடோ சட்டத்தைக் கொண்டு வந்ததேதவிர அரசியல் எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக அல்ல.
கைது மிரட்டல் ஏன்?
திருமங்கலத்திலும் பொள்ளாச்சியிலும் நான் பொதுக் கூட்டங்களில் பேசும்போது அதிமுகவையும்ஜெயலலிதாவின் அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினேன். இதனைத் தாங்கிக் கொள்ளும்மனப்பக்குவம் ஜெயலலிதாவுக்கு கிடையாது. இதனால் என்னைக் கைது செய்யப் போவதாக மிரட்டுகிறார்.
மிசா சட்டத்தின் கீழ் நான் கைதானவன். ஓராண்டு காலம் தொடர்ந்து சிறை வாசம் அனுபவித்திருக்கிறேன். 23 முறைசிறைக்குச் சென்றிருக்கிறேன். இதனால் என்னைக் கைது செய்வதாக மிரட்டுவதால் நான் பயந்துவிட மாட்டேன்.எனது அமெரிக்கப் பயணத்தை 2 நாட்கள் குறைத்துக் கொண்டு 12ம் தேதியே சென்னை திரும்பி வருவேன்.முடிந்தால் ஜெயலலிதா என்னைக் கைது செய்து பார்க்கட்டும்.
9 ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறேன். தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறது மதிமுக. தான்ஆடாவிட்டாலும் தனது சதை ஆடும் என்பதற்கேற்ப இலங்கையில் துன்புற்று, ரத்தக்கண்ணீர் வடித்து வரும் தமிழர்களுக்காக குரல் கொடுத்துவருகிறோம். ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் எங்களால் எப்போதாவது அமைதி கெட்டிருக்கிறதா? என்றுஜெயலலிதாவைக் கேட்க விரும்புகிறேன்.
ஈழத் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும நாங்கள் கொடுக்கும் ஆதரவு வெளிப்படையானது, ஒளிவுமறைவற்றது. எங்களது நிலைஅத்தனை பேருக்கும் தெரியும், இதில் மூடுமந்திரம் ஏதுமில்லை.
தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பாதகமாக நாங்கள் எப்போதும் செயல்பட்டதில்லை. இனியும் செயல்படப் போவதில்லை. உண்மைஇப்படியிருக்க என்னை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக ஜெயலலிதா மிரட்டியுள்ளார். முடிந்தால் என்னை அவர் கைதுசெய்யட்டும், அதை சந்திக்க நான் தயார்.
அதிமுக அரசை விமர்சித்து பேசி வருகிறேன் என்பதற்காக பொடா சட்டத்தைக் காட்டி பயமுறுத்துவதை ஜெயலலிதா முதலில் நிறுத்தவேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications