கேரள வக்கீல் கொலை வழக்கு: 7 கர்நாடக போலீஸார் விடுதலை
சென்னை:
கர்நாடக மாநிலம் பெங்களூருக்குச் சென்ற கேரள வக்கீல் ஒருவர் மர்மமான முறையில் சேலம் அருகே இறந்துகிடந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கர்நாடக துணை போலீஸ் கமிஷனர் உள்பட 7 பேரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரளாவைச் சேர்ந்தவர் எம்.ஏ. ரஷீத். இவர் ஒரு வழக்கறிஞர். கடந்த 1987ம் ஆண்டு வழக்கு தொடர்பாகபெங்களூர் சென்றிருந்த ரஷீத் அதன் பின்னர் திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் அவரது இறந்த உடல் சில நாட்களுக்குப் பிறகு சேலம் அருகே ஒரு ரயில் தண்டவாளத்தில் கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த சி.பி.ஐ. விசாரணையின் தொடர்ச்சியாக கர்நாடக அமைச்சர்ஜாலப்பா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகத்தையே உலுக்கியது இந்த கொலை வழக்கு. இதுதொடர்பாக சேலம்
முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்தது. விசாரணையின் இறுதியில் அமைச்சர் ஜாலப்பா உள்ளிட்ட 8பேர் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் 7 போலீஸாருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனையை எதிர்த்து பெங்களூர் துணை போலீஸ் கமிஷனர் நாராயணன் உள்ளிட்ட 7 பேர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தினகர் மற்றும் மலை சுப்ரமணியம்
ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளித்தனர்.
கொலை சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இருந்த தொடர்பு சரியாக நிரூபிக்கப்படவில்லை என்பதால்அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications