குறி சொல்லி பிழைப்பு நடத்தும் 100 பட்டதாரிகள்
சேலம்:
சேலம் அருகே ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் குறிசொல்லியே தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி கொங்கனாபுரம் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்டவகுப்பைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள 300 பேர் குறி சொல்லும் தொழிலைத் தான் செய்து வருகிறார்கள்.
காலப் போக்கில் இவர்களின் குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்று படிக்கவும் ஆரம்பித்தனர். சுமார் 100 பேர்பட்டப் படிப்பையும் முடித்து விட்டனர்.
அரசாங்க கெஸட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலிலேயே இவர்களுடைய ஜாதியும்சேர்க்கப்பட்டிருந்தாலும், இதுவரை இந்தக் கிராமத்திலிருந்து ஒருவருக்குக் கூட அரசாங்க வேலைகிடைக்கவில்லை.
அதற்காக அந்தப் பட்டதாரி இளைஞர்கள் சோர்ந்து போய்விடவில்லை. தங்களுடைய பரம்பரைத் தொழிலான குறிசொல்லும் தொழிலையே கையில் எடுத்துக் கொண்டுள்ளனர்.
அருகில் உள்ள கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று குறி சொல்லிப் பிழைத்து வருகின்றனர். பிழைத்துவருகின்றனர் என்று நாம் சாதாரணமாகவும் சொல்லி விட முடியாது.
ஏனென்றால் இதில் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறதாம். ஒரு வேளை அரசாங்க வேலையேகிடைத்திருந்தால் கூட இந்த அளவுக்கு சம்பாதித்திருக்க முடியாது என்றும் சொல்லும் இந்த பட்டதாரிஇளைஞர்கள், இதைவிட நன்றாக சம்பாதிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள்.
-->


Click it and Unblock the Notifications
