டெலிபோன் கேபிளைத் திருட முயன்ற 2 பேர் மின்சாரம் தாக்கி பலி
Subscribe to Oneindia Tamil
கூடலூர்:
விடெலிபோன் கேபிளை திருட முயன்ற 2 பேர் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது நிலக்கோட்டை எஸ்டேட். இங்கு டெலிபோன் கேபிளைத் திருடும்முயற்சியில் ராஜேந்திரன், ராஜரத்தினம் மற்றும் சுலைமான் ஆகிய 3 இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்சார வயரில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.
இதில் ராஜரத்தினம் மற்றும் சுலைமான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications