திமுகவுக்கு விரைவில் புதிய தலைவர்: கருணாநிதி தகவல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திமுக தலைமை விரைவில் மாற்றியமமைக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரான கருணாநிதி கூறினார்.

சென்னை மாநகர மேயராக இருந்த ஸ்டாலின் அப்பதவியிலிருந்து பறிக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம்முழுவதும் திமுகவினர் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் இன்று மாலை நடைபெறவுள்ள கண்டனப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார்.

இதற்காக இன்று காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அங்கு வந்த கருணாநிதிக்கு திமுகஉறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வெகு விரைவில் திமுகவின் பொதுக்குழு கூடவுள்ளது. பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு திமுக தலைமையில்மாற்றம் இருக்கும்.

திமுக ஒரு ஜனநாயகக் கட்சியாகும். எனவே எங்கள் கட்சியில் வாரிசு அரசியலுக்கு இடம் கிடையாது.

திமுக தலைமை குறித்து பொதுக்குழு தான் இறுதி முடிவெடுக்கும்.

ஸ்டாலினுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம் ஒரு கறுப்புச் சட்டம்.

காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலமுதல்வர்களையும் அழைத்து பிரதமர் வாஜ்பாய் பேச்சு நடத்த வேண்டும் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+