உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை கேட்கிறார் அத்வானி
டெல்லி:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசிய விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கைசமர்ப்பிக்குமாறு துணைப் பிரதமர் அத்வானி கோரியுள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பேட்டியளிக்கையில் அத்வானி கூறியதாவது:
புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எனக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை கேட்டுள்ளேன். இது தமிழக அரசு சம்பந்தப்பட்டவிவகாரம். இதில் நான் என்ன சொல்ல முடியும் என்றார் அத்வானி.
இந்த விவகாரத்தில் வைகோவை ஆதரிக்க வேண்டாம் என்று ரா உளவுப் பிரிவு மத்திய அரசுக்கு ஆலோசனைகூறியிருப்பதாகத் தெரிகிறது.
வைகோவின் நண்பரும் பிரதமரின் மிக நெருக்கமான சகாவான பிரமோத் மகாஜன் மூலமாக இந்த விவகாரத்தில்வாஜ்பாயுடன் மதிமுக மத்திய அமைச்சர்களான கண்ணப்பனும் பொன்னுசாமியும் பேசி வருகின்றனர்.
வைகோவும் அமெரிக்காவில் இருந்து பிரதமருடன் இது தொடர்பாகப் பேசுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications