பெரம்பலூரில் 14 தமிழ் தீவிரவாதிகள் கைது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த 14 தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசிய மீட்சிப் படை, தமிழ்நாடு விடுதலைப் படை ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசுசமீபத்தில் தடை விதித்தது.
இதையடுத்து அந்த இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகளைச் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பிடிப்பதற்குத் தமிழகம் முழுவதும் தனிப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு விடுதலைப் படையின் அலுவலகம் பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வந்தது.தற்போது இவ்வமைப்புக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு இந்த அலுவலகத்தைப் பூட்டி போலீசார் சீல்வைத்துள்ளனர்.
மேலும் இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஜெயங்கொண்டத்தைச் சுற்றியுள்ள முந்திரிக் காடுகளில்பதுங்கியுள்ளனர். அங்கேயே இருந்து கொண்டு கள்ளச் சாராயம் காய்ச்சுவதிலும் வழிப்பறிக் கொள்ளைகளிலும், டூவீலர்கள் திருட்டுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து அந்தக் காடுகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 தமிழ்நாடு விடுதலைப் படை தீவிரவாதிகளைப் போலீசார் கைதுசெய்துள்ளனர். மத்திய அரசு தடை விதித்த பிறகு மட்டும் இவ்வியக்கத்தைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் பலஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் பல தீவிரவாதிகள் இன்னும் இந்த முந்திரிக் காடுகளில் தலைமறைவாக இருந்துவருவதாகவும் அவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் பெரம்பலூர் மாவட்டடி.எஸ்.பி. பன்னீர் செல்வம் கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications