கருணாநிதி கைது: மனித உரிமைக் கமிஷன் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்
டெல்லி:
கருணாநிதி கைது, குஜராத் மதக் கலவரம் ஆகிய விவகாரங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைக் கமிஷனில்தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தனது விசாரணையில் எடுத்துக் கொண்டுள்ளது.
உடனே இந்த வழக்குகள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கும்அகமதாபாத் உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது தேசிய மனித உரிமைக் கமிஷன் அதிமுக அரசைக் கடுமையாகக்கண்டித்தது. மாநில அரசுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்தது. ஆனால், அதை மாநில அரசு ஏற்கவில்லை.இதையடுத்து மாநில அரசுக்கு எதிராக தேசிய மனித உரிமைக் கமிஷனில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதே போல குஜராத் மதக் கலவரத்தின்போது தேசிய மனித உரிமைக் கமிஷன் சொன்ன பரிந்துரைகளை அம்மாநில அரசு ஏற்கவில்லை. இதையடுத்து குஜராத் மாநில அரசு மீது மனித உரிமைக் கமிஷனில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது.
மனித உரிமைக் கமிஷன் விசாரித்து வரும் இந்த இரு வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையில்எடுத்துக் கொண்டுள்ளது. சட்டச் சிக்கல் நிறைந்திருப்பதால் இந்த இரு வழக்குகளையும் உடனடியாக உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுமாறு இரு மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கிரிபால், நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி அர்ஜித் பசாயாஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அதை தங்கள் விசாரணைக்கு மாற்றிக் கொண்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications