முன்னாள் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி கைது
ஈரோடு:
மதிமுகவின் முன்னாள் எம்.பியும் அக்கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளருமான கணேச மூர்த்தி இன்றுஅதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல்நபர் இவர் தான்.
கடந்த ஜூன் 29ம் தேதி திருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காகமதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது பொடா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இவர்களில் வைகோவைத் தவிர மற்ற 8 பேரையும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை திருமங்கலம்குற்றவியல் நீதிமன்றம் நேற்று இரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுரையிலிருந்து ஈரோட்டுக்கு இரவோடு இரவாகக் கிளம்பிய தனிப் படைப் போலீசார், அங்குள்ளகணேச மூர்த்தியின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பிக் கைது செய்தனர்.
இந்தப் படை உசிலம்பட்டி காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் ஈரோடு சென்றது.
எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்புடன் இருந்த கணேசமூர்த்தி கைதுவாரண்ட்டை போலீசாரிடம் இருந்து கேட்டுப் படித்துப் பார்த்த பின்னர் உடன் வர ஒப்புக் கொண்டார். அந்தஅதிகாலையிலும் அவரது வீட்டில் பெரும் கூட்டம் கூடி விட்டது. அவர் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில்ஏற்றப்பட்ட போது அவரது வீட்டினரும், பொது மக்களும் கண்கலங்கினர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய கணேசமூர்த்தி, இலங்கையில் ஒரு இனம் தனது வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், நமது தமிழக அரசு கைது செய்திருக்கிறது. இதைசட்டப்படி சந்திப்போம் என்றார்.
கைது செய்யப்பட்ட உடன் கணேச மூர்த்தி மதுரை திருமங்கலம் கொண்டு செல்லப்பட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications