வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அனைத்து மதிமுகவினரும் கைது
திருமங்கலம்:
ஈரோடு மாவட்ட மதிமுக செயலாளர் கணேச மூர்த்தி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட மதிமுகபிரமுகர்கள் 6 பேரையும் சிவகங்கை மாவட்டச் செயலாளரையும் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளரான வைகோ உள்பட 9 பேர் மீதுபொடாசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான ஆதாரங்களை நேற்று திருமங்கலம் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்ததைத்தொடர்ந்து வைகோ தவிர மற்ற 8 மதிமுகவினருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டைநீதிபதி வெங்கடாஜலபதி பிறப்பித்தார்.
ஈரோட்டில்..
இதையடுத்து நேற்று இரவே ஈரோடு புறப்பட்டுச் சென்ற தனிப்படை போலீசார், இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அம்மாவட்ட மதிமுக செயலாளர் கணேச மூர்த்தியை எழுப்பிக் கைது செய்தனர்.
மதுரை கட்சி அலுவலகத்தில்...
பின்னர் மதுரை மாவட்ட மதிமுக செயலாளர் வீர இளவரசன், மதுரை மதிமுக பிரமுகர் கணேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கோரிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்தனர்.இவர்கள் காலை இன்று கைது செய்யப்பட்டனர்.
அடுத்ததாக மதுரை மாநகர மதிமுக செயலாளர் பூமிநாதன் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. மணியன் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் அழகு சுந்தரம், தொண்டர்நாகராஜன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடியில்...
சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் புலவர் செவந்தியப்பன் காரைக்குடியில் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
இவர்கள் அனைவரும் திருமங்கலம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு ஆஜர்படுத்தப்பட்டபின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் திருமங்கலத்தில் வைகோ கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
தலைமறைவு:
முன்னதாக அழகு சுந்தரம், பூமிநாதன், நாகராஜன் ஆகியோரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.அவர்கள் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், இந்த மூவரும் மதுரையில் தான்இருந்தனர். அவர்களாகவே போலீசாரை அழைத்து தங்களை கைது செய்யுமாறு கூறினர். இதையடுத்து அவர்களைபோலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications