பெரம்பலூர் வங்கியில் கொள்ளை முயற்சி: அபாய மணி ஒலித்ததால் ரூ.3 கோடி தப்பியது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த போது அங்குள்ளஅபாய மணி ஒலி எழுப்பியதால் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் தப்பின.
பெரம்பலூர் அருகே பொம்மனாடி என்ற கிராமத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி உள்ளது.
இங்கு நேற்று முன் தினம் இரவு கொள்ளையர்கள் நுழைந்தனர். அப்போது அங்குள்ள அபாய மணி பயங்கரச்சத்தத்துடன் ஒலிக்கத் தொடங்கியது.
இதையடுத்து பொதுமக்களும் போலீசாரும் சுதாரித்துக் கொண்டு வங்கியை நோக்கி ஓடி வந்தனர்.
இதைக் கண்ட கொள்ளைக் கும்பல் தங்களுடைய கொள்ளை முயற்சியைக் கைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனால் வங்கியிலிருந்த இரண்டரை கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளைமுயற்சியிலிருந்து தப்பின.
வீடுகளில் தொடர் கொள்ளை:
பெரம்பலூரில் அதே இரவில் அடுத்தடுத்துள்ள 3 வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தைக்கொள்ளையடித்துச் சென்றனர்.
பெரம்பலூரில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வரும் கண்ணன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்அங்கிருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.35,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
பின்னர் அருகிலிருந்த வேறு இரண்டு வீடுகளிலும் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து 15 பவுன் நகைகளைக்கொள்ளையடித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
தகவலறிந்து மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களைச் சேகரித்துவிசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இரவு நேரங்களில் எப்போதும் போலீசார் ரோந்து செல்வதுவழக்கம். அந்த நிலையிலும் இந்தக் கொள்ளைகள் நடந்திருப்பது அவ்வூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் தான் இந்தக் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்றசந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications