காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
டெல்லி:
காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விட உத்தரவிடவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
காவிரியில் நீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வந்ததையடுத்து தமிழகத்தின் காவிரி டெல்டாவிவசாயிகள் இந்த ஆண்டு மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து காவிரி நதி நீர் ஆணையத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடரப் போவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் கூறியிருந்தார்.
அதன்படி இன்று தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கு தொடர்பான மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் ஆண்டு தோறும் உரிய முறையில் 205 டி.எம்.சி நீரைத்தமிழகத்திற்குத் திறந்து விட உத்தரவிட வேண்டும்.
இந்த ஆணையத்தை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கவேண்டும்.
காவிரியில் தமிழகத்திற்குத் திறந்து விடப்படும் நீரின் அளவைத் தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடவேண்டும்.
இவற்றைத் தவிர கர்நாடகத்தில் காவிரி நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள அணைகள் குறித்து சிறப்பு நிபுணர்கள்குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications