விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் வைகோ கைது செய்யப்படுவதை படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை புகைப்படக்காரக்கள் மீது போலீசார்வழக்கம்போல் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரு போட்டோகிராபர் காயமடைந்தார். கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும் சில மதிமுகவினர் விமான நிலையத்தில்நுழைந்துவிட்டனர். அவர்களை போலீசார் தாக்கி வேன்களில் அள்ளிப் போட்டனர்.
இதையும் மீறி பலர் வைகோ விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கு வந்துவிட்டனர். அவர்கள் வைகோவைப்பார்த்து அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
அவர்களிடையே பேசிய வைகோ, போராட்டம் என்ற பெயரில் பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது. சாலை மறியல் செய்துயாருக்கும் இடைஞ்சல் தரக் கூடாது. மிக அமைதியான வகையில் போராடுங்கள் என்றார்.
இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் என நிருபர்களிடம கூறிய வைகோவை போலீசார் வேனில் ஏற்றினர். பல போலீஸ்ஜீப்களும் முன் செல்ல போலீஸ் வேன்கள் பின் தொடர அவர் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் மதுரையை அடைய நாளை காலை 3 மணிக்கு மேல் ஆகிவிடும். அங்கு நீதிபதியில் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் மதுரைமத்திய சிறையில் அடைக்கப்படுவார்.
வைகோ கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதைப் படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை புகைப்பட நிருபர்கள் மீது போலீசார்பலப்பிரயோகம் செய்தனர். இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது போலீஸ்காரர் தாக்கியதில் ஒரு புகைப்பட நிருபர்காயமடைந்தார்.
எதிர்க் கட்சியினரின் போராட்டங்களைப் படம் எடுக்கும்போதும், எதிர்க் கட்சியினர் கைது செய்யப்படுவதை படம் எடுக்கும்போதும்பத்திரிக்கையாளர்களை தாக்குவதை தமிழக போலீசார் ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டுள்ளனர்.
போலீசாரின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து சென்னை விமான நிலைய வளாகத்திலேயே பத்திரிக்கையாளர்கள் தர்ணா போராட்டம்நடத்தினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications