அடுத்தது என்ன?
மதுரை:
சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பபட்டு போலீஸ் வேனில் மதுரை கொண்டு செல்லப்படும் மதிமுக பொதுச் செயலாளர்வைகோ இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதற்கான சிறப்பு அனுமதியை திருமங்கலம் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் பொறுப்பு வகிக்கும் வனிதாவிடம் போலீசார் கோரியுள்ளனர்.
இந்த நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் வெங்கடாஜலபதி 3 நாட்கள் விடுமுறையில் சென்றுவிட்டார். இவர் முதலில் வைகோவுக்கு எதிராகவாராண்ட் பிறப்பிக்க மறுத்தார். பின்னர் தான் போலீசாரின் தொடர் வேண்டுகோளால் வாராண்ட் பிறப்பித்தார்.
இவர் விடுமுறையில் சென்றுவிட்டதால் நீதிபதி வனிதா தான் அந்தப் பொறுப்பில் உள்ளார். அவர் முன்பாக நாளை அதிகாலை வைகோஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.
வைகோவை ஏற்றிக் கொண்டு மாலை 5 மணியளவில் புறப்பட்ட போலீஸ் வேன் மதுரையை அடைய சுமார் 10 மணி நேரமாகும். இந்தநெடும் பயணத்துக்குப் பின் நாளை அதிகாலை 3 மணியளவில் தான் மதுரையை இந்த வேன் அடையும்.
மதுரை திருமங்கலம் சென்றவுடன் நீதிபதியின் வீட்டில் வைத்தோ அல்லது நீதிமன்றத்தில் வைத்தோ வைகோவை ஆஜர்படுத்திவிட்டுஅவரை உடனடியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கவுள்ளனர்.
இதற்காக மதுரை மத்திய சிறைச்சாலையில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
வைகோவுக்கு முன்பாகக் கைதான 8 பேரில் 6 பேரை மதுரை சிறையில் இருந்து பிற இடங்களுக்கு அரசு மாற்றிவிட்டது. இதனால் மதுரைசிறையில் இருக்கும் வைகோவுடன் 2 மதிமுகவினர் தான் இருப்பர். இவர்களும் தனித்தனியே அடைக்கப்படலாம் என்று தெரிகிறது.
வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்கு விசாரணைக்காக மதுரையிலேயே ஒரு தனி நீதிமன்றத்தையும் அமைக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சிகாக்கோவில் இருந்து 12 மணி நேர விமானம் பயணம் செய்துவிட்டு, நள்ளிரவில் மும்பை வந்த அவர், சில மணி தூக்கத்துக்குப் பின்மும்பை விமான நிலையம் வந்துவிட்டார். மாலையில் சென்னை வந்த அவர் உடனடியாக போலீஸ் வேனில் மதுரை அழைத்துச்செல்லப்பட்டார். இதனால், உடல்ரீதியில் அவர் மிகவும் சோர்ந்துவிடக் கூடும்.
திருமங்கலம் காவல் நிலையத்தில் வைகோ மீது ஏற்கனவே எப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications