சந்திரிகா, ரணிலுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஸ்வந்த்சின்ஹா ஆலோசனை நடத்தினார்.
வெளியுறவுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற பின் சின்ஹா தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மாலத்தீவுக்கும்இலங்கைக்கும் மேற்கெண்டார்.
கொழுப்பில் அதிபர் சந்திரிகாவுடன் பேச்சு நடத்திய பின் நிருபர்களிடம் பேசிய சின்ஹா, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு சந்திரிகாவும்ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த முறை அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிச்சயம் வெல்லும் என்றும் சந்திரிகா நம்பிக்கை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றார்சின்ஹா.












Click it and Unblock the Notifications