ஜெயலலிதாவின் சிறப்புச் செயலாளர் மாற்றம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்புச் செயலாளரான கே. அருள்மொழி மாற்றப்பட்டுள்ளார்.
அருள்மொழிக்குப் பதிலாக நகராட்சி நிர்வாகத்துறை ஆணையாளராக இருந்த வி.கே. ஜெயக்கொடிஜெயலலிதாவின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த (பயிற்சி) துறையின் செயலாளராக அருள்மொழி மாற்றப்பட்டுள்ளார்.
இதே போல் வேறு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊனமுற்றோர் நலத்துறை ஆணையரான எஸ். மச்சேந்திரநாதன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சிறப்புச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலாளரான மோகன் வர்கீஸ் சுங்கத் ஊனமுற்றோர் நலத்துறை ஆணையாளராகமாற்றப்பட்டுள்ளார்.
ஐ.சி.டி.எஸ். திட்டம்-3ன் திட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ள அனுராதா காடி ராஜீவன் ஆதி திராவிடர் நலத்துறையின் ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த (பயிற்சி) துறை செயலாளரான ஆர். ஸ்ரீராம் உயர் கல்வித்துறையின்செயலாளராகியுள்ளார்.
தொழில்துறையின் கூடுதல் செயலாளரான ஸ்வரன் சிங் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான குத்சியா காந்தி கருவூலங்கள் மற்றும்கணக்குத் துறையின் சிறப்பு ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியை வகித்து வரும் ஜி.ஏ. ராஜ்குமார் ஊரக வளர்ச்சித் துறையின் சிறப்புச் செயலாளராகியுள்ளார்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் செயலாளரான சி.கே. கரியாலி மகளிர் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர்மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (திங்கள்கிழமை) பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசு உத்தரவில் இந்த இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications