கேமராக்கள் மூலம் வைகோ தொடர்ந்து கண்காணிப்பு
வேலூர்:
சிறையில் உள்ள வைகோவை ரகசிய கேரமாக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருவதாகத் தெரிகிறது.
வேலூர் சிறையில் பல அறைகளில் ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இப்போது வைகோ அடைக்கப்பட்டுள்ள தனி அறையிலும்ரகசிய கேமராக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் அவரை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பெரும்பான்மையான நேரத்தை புத்தகங்கள் படித்தே கழிக்கிறார். சிலநேரங்களில் எழுதுகிறார். பிற கைதிகள் அவரைப் பார்த்தால் வணக்கம் செலுத்துகின்றனர். அவரும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே பதில்வணக்கம் சொல்கிறார்.
அவருக்கு தினமும் ஒரு ஆங்கில பத்திரிக்கையும் ஒரு தமிழ் பத்திரிக்கையும் தரப்படுகிறது.
நேற்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அழைத்து வரப்பட்ட வைகோவுக்கு 300 போலீசார் பாதுகாப்புக்கு வந்தனர். வைகோ வெளியேஅழைத்து வரப்படுதையடுத்து அவரைக் காண வேலூர் சிறை வாயிலில் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கூடினர். ஆனால், அவர்களைபோலீசார் துரத்தி அடித்தனர்.
அவரை சென்னை அழைத்துச் செல்ல 11 மணி வரை மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவில்லை. காலையிலேயே குளித்து முடித்து தயார்நிலையில் வைகோ இருந்தார். 11 மணிக்கு மேல் தான் வேண்டா வெறுப்பான உத்தரவு சென்னையில் இருந்து வேலூர் சிறைஅதிகாரிகளுக்கு வந்தது.
வெளியே மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் தனது காரில் காத்திருந்தார்.
11 மணிக்கு மேல் தான் அவரை அழைத்துக் கொண்டு போலீசார் கிளம்பினர். முன்பும் பின்னும் 8 போலீஸ் வேன்கள், ஜீப்கள் வர வைகோதனி போலீஸ் வேனில் சென்னை கொண்டு வரப்பட்டார். வேலூர் மாவட்ட எஸ்.பியும் உடன் வந்தார். ஆனால், வேலூர் எல்லையைத்தொட்டவுடன் அவர் திரும்பிச் சென்றார்.
சரியாக 2.25 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் வந்தார் வைகோ. அவரது வேனுக்குப் பின் செஞ்சி ராமச்சந்திரன் வந்தார். உடனேவாக்களித்துவிட்டு 10 நிமிடத்தில் வேனில் ஏறி அமர்ந்தார் வைகோ.
உயர் நீதிமன்ற உத்தரவுப் படி அவர் நிருபர்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டார். ஆனால், அவரை படம் கூட எடுக்க விடாமல் போலீசார்தடுத்தனர். வாக்களிக்கும் அறையில் தான் அவரைப் படமெடுக்க முடிந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications