திண்டுக்கல்: கிணற்றில் பிணமாக மிதந்த 2 பள்ளி மாணவர்கள் - தற்கொலையா?
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் 2 பள்ளி மாணவர்கள் ஒரு கிணற்றில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தனர். அவர்கள்சாவுக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.
திண்டுக்கல் முருகபவனத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ரவியின் மகன் கார்த்திக் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.
இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பழைய இரும்பு வியாபாரி ரவியின் மகனான 7வது படிக்கும்மணிகண்டனும் கார்த்திக்கும் நெருங்கிய நண்பர்கள்.
மணிகண்டனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தால் இனிமேல் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவர்பிடிவாதம் பிடித்து வந்தார். இதையடுத்து அவருக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்வதாக அவருடைய தந்தைகூறியிருந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. இந்தவிழாவுக்கு கார்த்திக்கும் மணிகண்டனும் சென்றிருந்தனர். ஆனால் அன்று நள்ளிரவு வரை இருவரும் வீட்டிற்குத்திரும்பவில்லை.
இருவரின் பெற்றோரும் உறவினர்களும் ஊர் முழுவதும் தேடிப் பார்த்தனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்துகொட்டப்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தின் கிணற்றில் மணிகண்டன் பிணமாக மிதந்துகொண்டிருப்பதை அவர்கள் பார்த்து அதிர்ந்தனர்.
உடனே தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மணிகண்டனின்உடலை மீட்டனர்.
அதன் பிறகு கிணற்றில் மூழ்கித் தேடிப் பார்த்த போது கார்த்திக்கும் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது.அவருடைய உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டுக் கொண்டு வந்தனர்.
அந்த இரு உடல்களையும் பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.
மணிகண்டனையும் கார்த்திக்கையும் யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி விட்டார்களா அல்லது இருவரும்சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications