கொலையான பாலன் மகனின் "ஹேபியஸ் கார்பஸ்" மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கொலை செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏவான எம்.கே. பாலனின் மகன் மணிமாறன் தாக்கல் செய்திருந்த"ஹேபியஸ் கார்பஸ்" மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாலன் திடீரென்று காணாமல் போய்விட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தான்கடத்திச் சென்று விட்டனர் என்றும் அவரை உடனடியாகத் தங்கள் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் "ஹேபியஸ் கார்பஸ்" மனு ஒன்றை மணிமாறன் தாக்கல் செய்திருந்தார்.

இதன் பிறகு நடந்த தீவிர விசாரணையின் போது பாலன் கொலை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது. இந்தக்கொலை தொடர்பாக 17 பேரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மணிமாறன் தாக்கல் செய்திருந்த "ஹேபியஸ் கார்பஸ்" மனு இன்று விசாரணைக்கு வந்தது.

பாலன் உயிருடன் இருப்பதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதால் "ஹேபியஸ் கார்பஸ்" மனுவைத்தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள பாலன் தற்போதுஉயிருடன் தான் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் இந்த "ஹேபியஸ் கார்பஸ்"மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+