தமிழகத்துக்கு தண்ணீர் தரவில்லை: கர்நாடகம் மீண்டும் மறுப்பு
பெங்களூர்:
கபினி அணைக்கு அதிக அளவில நீர் வந்தவண்ணம் இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதியே அங்கிருந்தஉபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. அது தமிழகத்துக்குச் செனறது. மற்றபடி தமிழகத்துக்காக தண்ணீரைதிறந்துவிடவில்லை என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கர்நாடக அரசு விளக்கம் தந்துள்ளது.
தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு எதிர்க் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கும் என்ற காரணத்திற்காகவேஎந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கபினி அணையிலிருந்து கர்நாடக அரசு நீரை திறந்து விட்டது. இந்த நீர்தொடர்ந்து தமிழகத்துக்கு வந்தவண்ணம் உள்ளது.
இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு அரசு நீரை திறந்து விட்டதாகக் கூறி கர்நாடக எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கபினி அணையின் பாதுகாப்பு கருதியே அங்கு அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்த நீரைத் திறந்துவிட்டதாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீர்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல் விளக்கமளித்தார்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் பலத்த மழை காரணமாககபினி அணை கடந்த சில நாட்களில் வெகு வேகமாக நிரம்ப ஆரம்பித்தது. அணையின் மொத்த கொள்ளளவில் 3அடி நீர் குறைவாகவே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்த நீர் தான் திறந்து விடப்பட்டது.
கபினி அணையைத் தவிர மற்ற அணைகளில் நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. தற்போது 4 அணைகளிலும்சேர்ந்து 15.14 டி.எம்.சி. நீர் தான் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் 52.84 டி.எம்.சி. நீர் இருந்தது.
எனவே கர்நாடகத்திற்கே நீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.அனைத்துக் கட்சிகளும் கர்நாடக அரசின் இந்த நிலையை ஆதரித்துள்ளன. அதே போல கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவும் முதல்வருக்கு அனைத்துக்கட்சிகளும் அனுமதி தந்துள்ளன என்றார் பாட்டீல்.
இதற்கிடையே கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் மேட்டூர் அணைக்கு நேற்று மாலையில் இருந்து வரத்தொடங்கியது. வினாடிக்கு 7,330 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications