ஜனாதிபதி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
டெல்லி:
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி சற்று முன் தொடங்கியது. இன்று பிற்பகல் 3 மணிக்கு முடிவுஅறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல் கலாம் தான் என்று ஏறக்குறையமுடிவாகிவிட்டது.
கடந்த திங்கள்கிழமை (ஜூலை 15) நடந்த ஜனாதிபதி தேர்தலில் டாக்டர் அப்துல் கலாம் தவிர இடது சாரிக் கட்சிகள்நிறுத்திய சுதந்தரப் போராட்ட வீராங்கனையான கேப்டன் லட்சுமி சேகலும் போட்டியிட்டார்.
லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவின் 735 எம்.பிக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். மற்றும் அனைத்து மாநிலஎம்.எல்.ஏக்களும் தங்களுடைய வாக்குப்பதிவைச் செலுத்தினர்.
அனைத்து மாநிலங்களிலிருந்தும் வாக்குப் பெட்டிகள் ஏற்கனவே டெல்லி வந்து சேர்ந்து விட்டன.நாடாளுமன்றத்தின் 65ம் எண் கொண்ட அறையில் இந்த வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டன. அந்த அறைசீலிடப்பட்டு, அறைக்கு வெளியே ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது.ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும் ராஜ்ய சபா செயலாளருமான ஆர்.சி. திரிபாதி வாக்குப் பெட்டிகளின் சீல்களைஉடைத்துத் திறந்தார். பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.
பிற்பகல் 3 மணிக்குள் முடிவு அறிவிக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.
டாக்டர் கலாமுக்கு சுமார் 85 சதவீத வாக்குகளும் கேப்டன் லட்சுமி சேகலுக்கு சுமார் 15 சதவீத வாக்குகளும்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள டாக்டர் கலாம் வரும் 25ம் தேதி ஜனாதிபதி மாளிகையில்பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளும் அங்கு தீவிரமாக நடந்துவருகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications