ஒகேனக்கல்லில் கொட்டும் அருவி: மக்கள் மகிழ்ச்சி
ஒகேனக்கல்:
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து ஒகேனக்கல் அருவியில் ஏராளமானநீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கொளுத்திய கோடை வெயில் காரணமாக ஒகேனக்கல் அருவி வறண்டு போய்காணப்பட்டது.
இதனால் வழக்கமாக கோடை விடுமுறைக்கு அங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துகாணப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கேரள-கர்நாடக எல்லைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.இதையடுத்து கர்நாடகத்தின் கபினி அணை நிறைந்து விட்டது.
இதனால் அங்கு வந்து சேரும் உபரி நீர் முழுவதையும் தமிழகம் நோக்கி கர்நாடக அரசு திறந்து விட்டது.
இதைத் தொடர்ந்து கபினி அணையில் திறந்து விடப்பட்ட நீர் ஒகேனக்கல் அருவியில் வெள்ளமாக வந்து கொட்டிக்கொண்டிருக்கிறது. இதைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் மிகவும் மகிழ்ந்து போயுள்ளனர்.
மேலும் ஒகேனக்கல் அருவியில் நீர் கொட்டிக் கொண்டிருப்பதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்தக் கொண்டே வருகிறது.
மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு:
இதற்கிடையே கபினி அணையில் திறந்து விடப்பட்ட நீர் நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியுள்ளது.
இன்று காலைக்குள் மேட்டூர் அணையின் நீர் கொள்ளளவு இரண்டு அடி வரை அதிகரித்து 35.04 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 11,247 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு சுமார் 10,000 கன அடி நீர்பாசனத்திற்காகத் திறந்து விடப்படுகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications